June 27, 2026

விவசாயிகளிடம் ரூ. 1 லட்சம் லஞ்சம் கேட்ட தவெக நிர்வாகி: பாய்ந்த நடவடிக்கை

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே ஏரியில் முறையான அனுமதி இருந்தும் விவசாயிகளிடம் ரூ. 1 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார் தவெக கடலூர் தெற்கு மாவட்ட இணை செயலாளர் புலவேந்திரன். இந்த சம்பவம் பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ள நிலையில், அவர் மீது கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை பாய்ந்துள்ளது.

தமிழக வெற்றி கழகம் புதிதாக ஆட்சி அமைத்துள்ள நிலையில், அக்கட்சியை சார்ந்த நிர்வாகிகள் சில விரும்பத்தகாத செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது அரசியல் வட்டாரத்தில் கடுமையான விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் உண்டாக்கி கொண்டிருக்கிறது. அதோடு இது தவெகவுக்கு பின்னடைவாக அமையும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி ஒருவர் விவசாயிகளிடம் மாமூல் கேட்டுள்ள சம்பவம் மிகுந்த பரபரப்பினை கிளப்பியுள்ளது.

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைத்து கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களுக்கு மேலாகி விட்டது. இதற்கிடையில் சில சர்ச்சைகளில் அடுத்தடுத்து தமிழக வெற்றி கழகம் சிக்கி வருவது அரசியல் வட்டாரத்தில் பல விதமான விமர்சனங்களை கிளப்பி கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சியை வழங்குவேன் என முதல்வர் ஜோசப் விஜய் கூறி வரும் நிலையில், அவருடைய கட்சியை சார்ந்த நிர்வாகி புலவேந்திரன் என்பவர் விவசாயிகளை மிரட்டி ரூ. 1 லட்சம் கேட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

  

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள கண்டமங்கலம் ஏரியில் வழக்கமாக விவசாயிகள் வண்டல் மண் எடுப்பார்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு விவசாயிகள் வண்டல் மண் எடுப்பதற்கு ரூ. 1 லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளார் தமிழக வெற்றி கழகத்தை சார்ந்த நிர்வாகி புலவேந்திரன். இது சம்பந்தமான வீடியோக்கள் சமூக வலைத்தளங்கலில் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சைகளை உண்டாக்கியுள்ளது.

மேலும் லஞ்சம் கேட்ட தவெக நிர்வாகி புலவேந்திரனின் காரை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து இந்த சம்பவம் பரபரப்பினை கிளப்பியதை தொடர்ந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்த்து. லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சியை வழங்குவோம் என முதல்வர் ஜோசப் விஜய் கூறி வருகிறார். அதோடு இந்த ஆட்சியில் லஞ்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை என அமைச்சர்களும் தெரிவித்து கொண்டிருக்கின்றனர்.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது: ஜனநாயகன் தயாரிப்பாளர் நியமனம் – பிரேமலதா விஜயகாந்த் கடும் எதிர்ப்பு
இப்படியான நிலையில் அவருடைய கட்சியை சார்ந்தவர்களே இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவது சரியில்லை என பலரும் சோஷியல் மீடியாவில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த சம்பவம் கடுமையான சர்ச்சைகளை கிளப்பிய நிலையில், விவசாயிகளிடம் ரூ. 1 லஞ்சம் கேட்ட தவெக நிர்வாகி புலவேந்திரன் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.

இது சம்பந்தமாக தமிழக வெற்றி கழகத்தின் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் சீனுவாசன் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது, தமிழக வெற்றி கழகம் – கடலூர் தெற்கு மாவட்ட இணை செயலாளராக செயல்பட்டு வந்த புலவேந்திரன் என்பவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டுள்ளார். கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது. கட்சியின் தலைவரின் நற்பெயருக்கு கேடு விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டுள்ளார்.

இதன் காரணமாக கழகத் தலைமை மற்றும் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் ஒப்புதலோடு இன்று கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார். எனவே நமது தமிழக வெற்றி கழகம் – கடலூர் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மாவட்ட சார்பு அணிகள், ஒன்றிய, நகர, பேரூர், கிளை வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் என யாரும் கழகம் சார்ந்த எவ்விதமான தொடர்பையும் புலவேந்திரன் உடன் வைத்துக்கொள்ளக் கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love