October 9, 2026

மேலவலசை – காஞ்சிரங்குடியில் 266-வது ஆண்டு எருதுகட்டு விழா: காளைகளை அடக்கி அசத்திய காளையர்கள்!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் மேலவலசை–காஞ்சிரங்குடி பகுதியில் உள்ள அருள்மிகு பொன்னும் சிறை எடுத்த அய்யனார் திருக்கோவில் திருவிழாவையொட்டி 266-வது ஆண்டு பாரம்பரிய எருதுகட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

 இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் பங்கேற்றன. களத்தில் சீறிப்பாய்ந்த காளைகள், அவற்றை அடக்க முயன்ற காளையர்களுக்கு போக்கு காட்டி ஏமாற்றியதுடன், பிடியில் சிக்காமல் துள்ளிக் குதித்து சென்ற காட்சிகள் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தின. அதே நேரத்தில், காளைகளின் வேகத்தையும் துள்ளலையும் பொருட்படுத்தாமல் விடாப்பிடியாக சுற்றி வந்து அவற்றை அடக்கிய காளையர்கள் வீரத்தை வெளிப்படுத்தினர். 

காளைகள் சீறிப்பாய்ந்த ஒவ்வொரு தருணத்திலும் பார்வையாளர்கள் ஆரவாரம் எழுப்பிய நிலையில், காளைகளை அடக்கிய காளையர்களுக்கு பாராட்டுகள் குவிந்தன. பாரம்பரியமும் வீரமும் கலந்த இந்த எருதுகட்டு விழாவை காண மேலவலசை, காஞ்சிரங்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர். விழாவையொட்டி அப்பகுதி முழுவதும் திருவிழா களைகட்டியது.

Spread the love