சென்னை: விஜய் பிரச்சார வாகனத்தின் முன் பைக் சாகசத்தில் ஈடுபட்ட அண்ணா பல்கலைக்கழக ஊழியருக்கு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்துள்ளனர்.
தவெக தலைவர் விஜய் சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர் மற்றும் எழும்பூர் ஆகிய தொகுதிகளில் கடந்த புதன்கிழமை ரோடு ஷோ நடத்தினார். அப்போது ஆயிரக்கணக்கானோர் திரண்டு விஜய்யை வரவேற்றனர்.
கோட்டூர்புரம் காந்தி மண்டபம் சாலை அருகே விஜய்யின் பிரச்சார வாகனம் சென்றபோது பைக்கில் சென்ற நபர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் இரு கைகளையும் விட்டு விட்டு பைக் சாகசத்தில் ஈடுபட்டார்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இதில் பைக் சாகசத்தில் ஈடுபட்டது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வரும் மனோஜ்குமார் என்பது தெரியவந்து.
அவர் மீது ஹெல்மெட் அணியாமல் சென்றது, அதிவேகமாக வாகனத்தை இயக்கியது, உடைந்த நம்பர் பிளேட், ஆவணங்கள் சரியாக வைக்காதது உள்ளிட்ட காரணங்களுக்காக ரூ.3,000 அபராதம் விதித்தனர். மேலும் அவரது பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

More Stories
திருமயத்தில் சுழன்று சுழன்று வாக்கு சேகரித்த அமைச்சர் ரகுபதி
2026 தமிழக சட்டமன்ற தேர்தல்: வெளியான மெகா சர்வே முடிவுகள்-தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சி?
தமிழகத்தில் வீதி எங்கும் விசில் கோலங்கள்! விஜய்யின் ஒற்றை வேண்டுகோளுக்கு கிடைத்த மாஸ் ரெஸ்பான்ஸ்