February 11, 2026

விஷப்பூச்சி கடித்து 3-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு: அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

விஷப்பூச்சி கடித்து 3-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு: அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

சென்னை: விஷப்​பூச்சி கடித்து 3-ம் வகுப்பு மாணவி உயி​ரிழந்​தது தொடர்​பாக அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர். இது தொடர்​பாக அவர்கள் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி: திரு​வாரூர் மாவட்​டம் வலங்​கை​மானில் உள்ள பள்ளி வளாகத்​தில் விஷப்​பாம்பு கடித்து மாணவர் உயி​ரிழந்த நிலை​யில், நாமக்​கல் மாவட்​டம் அரசுப் பள்​ளி​யில் விஷப்​பூச்சி கடித்து 3-ம் வகுப்பு மாணவி உயி​ரிழந்​த​தாக வரும் தகவல்​கள் அதிர்ச்சி அளிக்​கின்​றன.

இதற்​கிடையே, கள்​ளக்​குறிச்சி கீழத்​தேனூர் ஊராட்சி ஒன்​றிய நடுநிலைப் பள்​ளி​யில் மேல்​நிலை நீர்​தேக்​கத் தொட்​டியை மாணவர்​களை வைத்து சுத்​தம் செய்த தகவலும் வெளிவந்​துள்​ளது. அரசுப் பள்​ளி​கள் நலனில் திமுக அரசு கவனம் செலுத்​த​வில்லை என்​ப​தையே இது வெளிப்​படுத்​துகிறது.

பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: அரசுப் பள்​ளி​களில் விஷப்​பூச்​சிக்​கும், பாம்​புக்​கும் இரு மாணவர்​களை இழந்த ரணம் ஆறும் முன்​பே, கள்​ளக்​குறிச்சி கீழத்​தேனூர் நடுநிலைப் பள்ளி மாணவர்​கள் பாது​காப்​பின்றி மேல்​நிலை நீர்த்​தேக்​கத் தொட்​டி​யில் ஏறி சுத்​தம் செய்​யும் காணொலி வெளி​யாகி​யிருக்​கிறது. இந்த சம்​பவத்​தில் தொடர்​புடைய​வர்​களின் மீது துறை ரீதி​யான நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன்: அரசுப் பள்​ளி​களில் பாது​காப்​பான சூழலுக்கு தொடர் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தவறி​விட்​டது

அமமுக பொதுச் செய​லா​ளர் டிடிவி தினகரன்: அரசுப் பள்​ளி​களுக்​குள் பாம்​புகள், விஷப்​பூச்சி போன்றவை நுழைந்​திருப்​பது, அப்​பள்​ளி​களில் நில​வும் சுகா​தா​ரமற்ற சூழலை வெளிச்​சம்​போட்​டுக் காட்​டி​யுள்​ளது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Spread the love