தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத்துறையின் மூலம் பாரம்பரிய கலைகள்பாதுகாத்து, அவற்றை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.அதன்படி, கரூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் கலைப் பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டவர்களில், 18 வயதிற்குட்பட்ட 3 கலைஞர்களுக்கு கலை இளமணி விருதும், தலா ரூ.4,000 பரிசுத்தொகையும்; 19 முதல் 35 வயது வரையிலான 3 கலைஞர்களுக்கு கலை வளர்மணி விருதும், தலா ரூ.6,000 பரிசுத்தொகையும்; 36 முதல் 50 வயது வரையிலான 3 கலைஞர்களுக்கு கலைச்சுடர்மணி விருதும், தலா ரூ.10,000 பரிசுத்தொகையும்; 50 முதல் 65 வயது வரையிலான 3 கலைஞர்களுக்கு கலை நன்மணி விருதும், தலா ரூ.15,000 பரிசுத்தொகையும்; 65 வயதிற்கு மேற்பட்ட 3 கலைஞர்களுக்கு கலை முதுமணி விருதும், தலா ரூ.20,000 பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.மொத்தம் 15 கலைஞர்களுக்கு விருதுகளையும், அதற்கான பரிசுத்தொகைகளையும் மாவட்ட ஆட்சியர் சி. முத்துக்குமரன், வழங்கினார்.இதில் கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குநர் (திருச்சி மண்டலம்) த. செந்தில்குமார், கரூர் அரசு இசைப்பள்ளி முதல்வர் . ஆ.வி.செ. குருமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
15 சிறந்த கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கும் விழா

More Stories
கருர் செப்30
கரூர்
உலக இதய தினத்தை முன்னிட்டு கரூர்அப்போலா மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு மராத்தான் போட்டி நடந்தது.