லக்னோ: உத்தர பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் நேற்று நடைபெற்ற ‘பிரிவினை கொடுமை நினைவு நாள்’ நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:
அரசியல் அதிகாரத்துக்கு முன்னுரிமை அளித்ததன் மூலம் காங்கிரஸ் கட்சி நாட்டுக்குத் துரோகம் இழைத்துவிட்டது. சுதந்திரத்தின்போது நமது நாடு பிளவுபட்டதற்கு காரணம் காங்கிரஸ் கட்சிதான்.
சுதந்திரத்தின் போது நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக இருந்திருந்தால் வரலாறு வேறு மாதிரியாக இருந்திருக்கும். யாராலும் இந்தியாவுக்கு சிறிதளவும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்க முடியாது. சர்தார் வல்லபாய் படேல் போன்ற ஒரு தலைவர் ஆட்சியில் இருந்திருந்தால் இந்தியாவைப் பிளவுபடுத்த அனுமதித்திருக்க மாட்டார். காங்கிரஸ் தலைவர்களின் செயலுக்காக நாடு பெரும் விலையைக் கொடுக்க வேண்டியிருந்தது.
சுதந்திரத்தின்போது வங்கம், வங்காள மக்கள் அதிகம் வசித்த பகுதியாக இருந்தது. இந்துக்கள் அதிகம் வசித்த கிராமங்கள் அனைத்தும் கட்டாயமாக வங்கதேசத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் அதீத ஆர்வம் காட்டிய காங்கிரஸால் இந்த அவமானகரமான செயல் செய்யப்பட்டது; நாடு அந்தக் கட்சியின் மீது நம்பிக்கை வைத்திருந்தது, ஆனால் அக்கட்சி அந்த நம்பிக்கைக்குத் துரோகம் இழைத்தது. இவ்வாறு அவர் பேசினார்.

More Stories
“பிரதமர் மோடி அனைத்திற்கும் உரிமை கோருகிறார்”: சுதந்திர தின உரையில் கார்கே சாடல்
“தேர்வுகளுக்கு இலவச பயிற்சி, ஒரு கோடி இளைஞர்களுக்கு ஏஐ பயிற்சி” – பிரதமர் மோடி அறிவிப்பு
ஜப்பானில் வரலாறு காணாத கனமழை.. 7,000 பயணிகள் விமான நிலையத்தில் தவிப்பு!