சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று (செப்.19) பவுனுக்கு ரூ.1,040 உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்துள்ளது.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதலின் தாக்கம் உலக பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது. அது சர்வதேச அளவில் தங்கம் விற்பனையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த மே மாதம் தங்கம் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. இதோடு கடந்த 1-ம் தேதி அன்று ‘தேவையின்றி தங்கம் வாங்காதீர்கள்’ என நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இதையடுத்து தங்கம் விலை சந்தையில் ஏற்ற இறக்கத்துடன் விற்பனை ஆகிறது. இந்நிலையில், சென்னையில் நேற்று (வெள்ளிக்கிழமை) தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,160 உயர்ந்து விற்பனையானது.
இன்றைய விலை விவரம்:
இந்நிலையில், சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,285-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.1,040 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,14,280-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.142 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,584-க்கு விற்பனை ஆகிறது. 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,055-க்கு விற்பனை ஆகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரையில் இன்று சந்தையில் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.260-க்கு விற்பனை ஆகிறது. கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.2,60,000-க்கு விற்பனை ஆகிறது.

More Stories
இந்தியாவில் ஐபோன் 18 சீரிஸ் விற்பனை தொடக்கம்: அதிகாலை முதலே வரிசையில் நின்ற பயனர்கள்
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் தொடரும்: இந்தியா உறுதி
தங்கம் விலை அதிரடியாக ரூ.1,160 அதிகரிப்பு – என்ன காரணம்?