October 14, 2026

200கர்ப்பிணி பெண்களுக்கு சீர் வரிசை பொருட்கள்:அமைச்சர் வழங்கல்

கரூர் அக்14

கரூர் மாவட்டத்தில் பால்வளம் மற்றும் பால் உற்பத்தித் துறை அமைச்சர் விஜயலட்சுமி சின்னசாமி, மாவட்ட ஆட்சியர் . சி. முத்துக்குமரன்,, தலைமையில்,  நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் 200 கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் விஜயலட்சுமி சின்னசாமி பேசியதாவது:

தமிழக முதலமைச்சரின் நல்வாழ்த்துகளுடன் நடைபெற்று வரும் சமுதாய வளைகாப்பு விழாவில் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் தாய்மை என்பது ஓர் அற்புதமான நிகழ்வாகும்., எளிய கர்ப்பிணிப் பெண்கள் தங்களது தாய்மைக் காலத்தில் வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்துவதற்கு யாரும் இல்லை என்ற நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக, தமிழக முதலமைச்சர்  இத்தகைய சமுதாய வளைகாப்பு விழாக்களைச் சிறப்பாக நடத்த உத்தரவிட்டுள்ளார.

கர்ப்பிணிப் பெண்களின் முகத்தில் காணப்படும் மகிழ்ச்சி தனி அழகைக் கொண்டது. இந்த உலகிற்கு ஒரு புதிய உயிரை அளிக்கும் வாய்ப்பு பெண்களுக்கே கிடைத்துள்ளது. இதற்காக ஒவ்வொரு பெண்ணும் பெருமை கொள்ள வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்கள் நல்ல புத்தகங்களைப் படிப்பதன் மூலமும், இனிமையான பாடல்களைக் கேட்பதன் மூலமும் நல்ல சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளலாம். தாயின் உணர்வுகளும் செயல்பாடுகளும் குழந்தையின் வளர்ச்சியில் முக்கியப் ப, குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்காக நல்ல சிந்தனைகளைப் பின்பற்றுவதுடன், சத்தான உணவுகளை உட்கொண்டு உடல்நலத்திலும் பாதுகாப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். அனைத்து கர்ப்பிணிப் பெண்களும் ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

200 கர்ப்பிணிப் பெண்களுக்கு தலா ஒரு வெள்ளித் தாம்பூலத் தட்டு, பட்டுப்புடவை, ஆவின் நெய், ஆவின் பாதாம் பவுடர், ஆவின் ஓட்ஸ் பிஸ்கட், ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல்கள் மற்றும் வேப்பிலை காப்பு உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்களை அமைச்சர் வழங்கினார்.

தொடர்ந்து, கர்ப்பிணிப் பெண்களுக்கு எலுமிச்சை சாதம், புளி சாதம், தயிர் சாதம் உள்ளிட்ட ஐந்து வகையான கலவை சாதங்களைப் பரிமாறிய அமைச்சர், அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

Spread the love