திருவனந்தபுரம்: கேரளாவில் 23 வயது பூர்த்தியடையாத நபர்களுக்கு மதுபானம் விநியோகிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் வயதை உறுதி செய்ய ஆதார் உள்ளிட்ட அரசு அடையாளச் சான்றுகளைக் கட்டாயம் பரி சோதிக்க வேண்டும் என்று மாநில கலால் துறை பார்களுக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
வயது குறைவாகத் தோன்றும் வாடிக்கையாளர்களுக்கு மது வழங்கும் முன் ஆதார் அல்லது வயதை உறுதிப்படுத்தும் வேறு அடையாள ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும், விதியை மீறும் பார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலால்துறை அமைச்சர் எம். லிஜு எச்சரித்துள்ளார்.
கொச்சி நெடும்பாசேரியில் மினி கூப்பர் காரை மோதி உயிரிழப்பு ஏற்படுத்திய 19 வயது இளைஞர் சுஹைல் சஜீவுக்கு, வயதுச் சான்று எதுவுமின்றி மது விநியோகிக்கப்பட்டதையடுத்து, 23 வயதுக்கு உட்பட்டோருக்கு மதுபானம் வழங்கும் பார்களின் லைசென்ஸை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு புதிய மதுபானக் கொள்கையை உருவாக்கி வருவதாகவும், கேரள உயர் நீதி மன்றத்திடம் தெரிவித்தபடி, நவம்பர் மாதத்தில் புதிய கொள்கை அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

More Stories
கோவையில் ஈஷாவின் மண் காப்போம் மாதிரி பண்ணையில் மண் உயிரியல் பயிற்சி:10 நாடுகள், 6 கண்டங்களைச் சேர்ந்த 46 பேர் பங்கேற்பு
ஜி.எஸ்.எல்.வி.-எஃப்18 ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-03 விண்கலம் விண்ணில் பாய்ந்தது!
பூட்டானில் பனி ஏரி உடைப்பு: மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெட் அலர்ட்