August 12, 2026

24 மணி நேரமும் ரேஷன் அரிசி வழங்கும் ‘அன்னபூர்த்தி தானிய ஏடிஎம்’ – சத்தீஸ்கரில் அறிமுகம்

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்​தில் பொது​மக்​கள் 24 மணி நேரமும் ரேஷன் அரிசி வாங்​கு​வதற்கு வசதி​யாக, வங்கி ஏடிஎம் போல செயல்​படும் ‘அன்னபூர்த்தி தானிய ஏடிஎம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்​ளது.

‘அன்னபூர்த்தி கிரெயின் ஏடிஎம்’ என பெயரிடப்​பட்​டுள்ள இத்திட்டம், தலைநகர் ராய்ப்​பூர் பிர்​கான் பகு​தி​யில் தொடங்கப்பட்​டுள்​ளது. இதன்​மூலம், பயனாளி​கள் 24 மணி நேரமும் தங்​களுக்​கான மாதாந்​திர ரேஷன் அரிசி​யைப் பெற்​றுக்​கொள்ள முடி​யும்.

ஏடிஎம் செயல்​படு​வது எப்​படி?

பயனாளி​கள் தங்​களது ரேஷன் அட்டை விவரங்​களை உள்​ளிட்​டு, கைரேகை​யைப் பதிவு செய்​ததும், அவர்​களுக்கு ஒதுக்​கப்​பட்ட அளவு அரிசி இயந்​திரத்​திலிருந்து வெளியே வரும். இந்த இயந்திரம் சுமார் 2,500 கிலோ அரிசியை சேமித்து வைக்​கும் திறன் கொண்டது.

அரிசியை இயந்​திரத்​தில் நிரப்​புவதும், பயனாளி​களுக்கு விநியோகிப்​பதும் தானி​யங்கி முறை​யில் நடை​பெறும். இந்த கிரெயின் ஏடிஎம், உள்​ளூர் பெண்​கள் சுயஉதவிக் குழு​வான ஜோதி குழு​வால் இயக்​கப்​படு​கிறது. இந்​தத் திட்​டத்​துக்கு உலக உணவுத் திட்​டம் ஆதரவு அளித்து வரு​கிறது.

Spread the love