May 18, 2026

4 ஆண்டுக்கு மேலாக பாலியல் கொடுமை: ராஜஸ்தானில்2 சகோதரிகள் அடுத்தடுத்து தற்கொலை

ஜோத்பூர்: கூட்டு பாலியல் வன்​கொடுமை, பிளாக் மெயில் ஆகிய​வற்​றால் விரக்​தி​யடைந்த 2 சகோ​தரி​கள் அடுத்​தடுத்து தற்கொலை செய்து கொண்​டனர்.

ராஜஸ்​தான் மாநிலம் ஜோத்​பூரைச் சேர்ந்த இளம் பெண் ஒரு​வருக்கு உள்​ளூரைச் சேர்ந்த மஹி​பால் என்​பவருடன் அறி​முகம் ஏற்​பட்​டுள்​ளது. அவர் அங்​குள்ள இ-மித்ரா சேவை மைய ஆபரேட்டராக பணிபுரிந்து வந்​தார். அவர் தன்​னுடன் பழகிய இளம்​ பெண்​ணின் ஆபாச வீடியோக்​களை ரகசி​ய​மாக பதிவு செய்​தார்.

பின்​னர் அந்த வீடியோவை காட்டி பிளாக் மெயில் செய்து பாலியல் வன்​கொடுமை செய்​துள்​ளார். அவர் மட்​டும் அல்​லாமல் அவரது நண்​பர்​களும் இளம் பெண்ணை மிரட்டி சுமார் 4 ஆண்டுகளாக கூட்டு பாலியல் வன்​கொடுமை செய்​துள்​ளனர். அதோடு பிளாக் மெயில் செய்து பணமும் பறித்​துள்​ளனர். பல ஆண்​டு​களாக நீடித்த இந்த கொடுமையை பொறுத்​துக் கொள்ள முடி​யாமல் அந்த இளம்​பெண் கடந்த மார்ச் 20ம் தேதி தற்​கொலை செய்து கொண்​டார்.

இச்​சம்​பவம் குறித்து இளம் ​பெண்​ணின் சகோ​தரி போலீ​ஸில் கடந்த ஏப்​ரல் மாதம் 11ம் தேதி புகார் அளித்​தார். தனது சகோதரியின் மரணத்​துக்கு நீதி கிடைக்​க​வில்​லை​யென்​றால் தானும் தற்​கொலை செய்து கொள்​வேன் என அவர் போலீஸாருக்கு எச்​சரிக்கை விடுத்​தார். எனினும் போலீ​ஸார், உறுதி​யான நடவடிக்கை எது​வும் எடுக்​க​வில்​லை.

இதனால் பாலியல் வன்​கொடுமை குற்​ற​வாளி​கள் புகார் அளித்த சகோ​தரிக்கு தொந்​தரவு கொடுக்க ஆரம்​பித்​தனர். தற்​கொலை செய்த பெண்​ணின் வீடியோக்​களை பொது​வில் வெளி​யிடு​வோம் என கூறி அவரது சகோ​தரிக்கு பாலியல் தொந்​தரவு அளித்​தனர். இதனால் அந்​தப் பெண் விஷம் அருந்​தி தற்கொலை செய்து கொண்டார்.

இச்​சம்​பவம் ஜோத்​பூரில் ராஜ் புத் சமு​தா​யத்​தினர் இடையே கொந்​தளிப்பை ஏற்​படுத்​தி​யது. அவர்​கள் பிரேத பரிசோதனை நடை​பெற்ற மருத்​து​வ​மனை​யில் போராட்​டம் நடத்​தினர். இச்சம்பவம் குறித்து ஜோத்​பூர் எஸ்​.பி. நித்யா அளித்த பேட்​டி​யில், ”முக்​கிய குற்​ற​வாளி மஹி​பால் உட்பட 2 பேர் இந்த வழக்​கில் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். மற்ற குற்​ற​வாளி​களும் விரை​வில் கைது செய்​யப்​படு​வர். பாலியல் வன்​கொடுமை புகாருக்கு நடவடிக்கை எடுக்​கத் தவறிய போலீ​ஸார்​ மீது நடவடிக்​கை எடுக்கப்​படும்​” என்​றார்​.

Spread the love