புதுடெல்லி: அசாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.
தேர்தல் செலவு அறிக்கையை காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது. இதன்படி, தேர்தல் காலத்தில் காங்கிரஸ் ரூ.207.1 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இதில் ரூ.104 கோடி ரொக்கமாகவும் ரூ.103.1 கோடி காசோலை அல்லது வரைவோலையாகவும் பெற்றுள்ளது.
இதுபோல இந்த 5 மாநில தேர்தலின்போது ரூ.248.6 கோடி செலவிட்டுள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. பிரச்சாரத்துக்காக ரூ.143 கோடியும், வேட்பாளர்களுக்காக ரூ.105.6 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.
கேரளாவில் ஆட்சி
கேரளாவில் மட்டும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி 10 ஆண்டுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றியது. மற்ற மாநிலங்களில் தோல்வி அடைந்தது. அசாமில் 21, புதுச்சேரியில் 6, மேற்கு வங்கத்தில் 2, தமிழ்நாட்டில் 5 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

More Stories
காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவு
ஹைதராபாத்தில் உற்சாகமாக விநாயகர் சிலைகள் ஊர்வலம்: ரூ.39 லட்சம் ஏலம் போன லட்டு பிரசாதம்
காஷ்மீரில் இல்லாத ஓட்டலுக்கு முன்பதிவு செய்து ஏமாற்றம்: கடுங்குளிரில் காரிலேயே தங்கிய குடும்பம்