தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட இளைஞர் அணி சார்பில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி தினசரி மார்க்கெட்டில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அ. லாரன்ஸ் ரமேஷ் ஏற்பாட்டில் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கலந்து கொண்டு விழிப்புணர்வு பிரசுரத்தை வழங்கினார். இந்நிகழ்வில் மாநில துணைத் தலைவர் ப.திருமூர்த்தி மாவட்ட தலைவர் இரா.க.சண்முகவேல் துணை தலைவர் நெல்லை ஏ.ராஜா செயலாளர் பொ.இராமச்சந்திரன் பொருளாளர் உதயம் பொ.செல்வம், கோவை மண்டல இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் மு.பாலகிருஷ்ணன் மாவட்ட செய்தி தொடர்பாளர் ஏ.ஆர்.சாதிக் பாட்சா உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

More Stories
07-08-2026
பழனியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீதுதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார்
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு