August 7, 2026

7 மணி நேரம் விண்​வெளியில் நடந்த இந்​திய வம்​சாவளி வீரர்

வாஷிங்​டன்: இந்​திய வம்​சாவளியை சேர்ந்த அமெரிக்​கா​வின் நாசா விண்வெளி வீரர் அனில் மேனன் கடந்த ஜூலை 14-ம் தேதி சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​துக்கு சென்​றார். மருத்​து​வ​ரான அவர் அடுத்த ஆண்டு ஏப்​ரல் மாதம் வரை விண்​வெளி நிலையத்தில் தங்​கி​யிருந்து பல்​வேறு ஆராய்ச்​சிகளை மேற்கொள்ள உள்​ளார்.

தற்​போது சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​தின் வெளிப்​புறம் பொருத்​தப்​பட்டு இருக்​கும் சூரிய மின் உற்​பத்​திக்​கான சாதனத்தில் பல்​வேறு மாற்​றங்​களை செய்ய வேண்​டிய அவசி​யம் எழுந்​தது. இதற்​காக நாசாவை சேர்ந்த விண்​வெளி வீராங்​கனை ஜெசிகா​வும் இந்​திய வம்​சாவளி வீரர் அனில் மேனனும் நேற்று விண்​வெளி​யில் நடந்து சூரிய மின் உற்​பத்தி சாதனத்​தில் தேவையான மாற்​றங்​களை செய்​தனர். இரு​வரின் விண்​வெளிநடை, சுமார் 7 மணி நேரம் வரை நீடித்​தது.

இதுகுறித்து நாசா விஞ்​ஞானிகள் கூறிய​தாவது: சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​தின் செயல்​பாட்​டுக்கு கூடு​தல் மின்​சா​ரம் தேவைப்​படு​கிறது. இதற்​காக விண்​வெளி நிலை​யத்​தின் வெளிப்​புறம் உள்ள 3பி பவர் சேனல் சாதனத்​தில் நாசா விண்​வெளி வீரர்​கள் மாற்​றங்​களை செய்து உள்​ளனர். இதன்​மூலம் கூடு​தல் சூரிய மின்​சார தகடு​களை பதிக்க முடி​யும்.

இந்த ஆண்டு இறு​தி​யில் 3பி பவர் சேனலில் கூடு​தல் தகடு​களை பதிக்க திட்​ட​மிட்டு உள்​ளோம். அப்​போதும் நாசா வீரர்​கள், விண்​வெளி நடையை மேற்​கொள்​வார்கள். விண்வெளி நிலையத்துக்கு முதல்முறையாக சென்றுள்ள அனில் மேனன் முதல்முறை வெற்றிகரமாக விண்வெளி நடையை மேற்கொண்டு உள்ளார். ஜெசிகாவுக்கு இது 6-வது விண்வெளி நடை ஆகும். இவ்வாறு நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Spread the love