June 19, 2026

மூத்த தலைவர்கள், திரை பிரபலங்கள்.. சட்டமன்றத்தில் இரங்கல் தீர்மானம்!

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மூத்த தலைவர்களின் மறைவுக்கு சட்டமன்றத்தில் இரங்கல் தீர்மான வாசிக்கப்பட்டுள்ளது. மேலும்,மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் சி.ராமசாமி, த.வீராசாமி, சி.சுவாமிநாதன் உள்ளிட்டோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்தபிறகு நடைபெறும் முதல் முழுமையான சட்டப்பேரவை கூட்டத்தொடர், நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. முந்தைய திமுக ஆட்சியின்போது முன்னாள் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் முதலில் பாடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, மத்திய அரசுக்கு எதிரான வாக்கியங்களை உரையின்போது படிக்காமல் புறக்கணிப்பையும் செய்திருந்தார். எனினும், நேற்று தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டப்பேரவை தொடங்கிய நிலையிலும், அரசு குறிப்புகளில் கொடுக்கப்பட்ட அனைத்தனையும் ஆளுநர் அர்லேகர் உரையாற்றியிருக்கிறார

சபாநாயகர் ஜே.டி.சி பிரபாகர்

சபாநாயகர் ஜே.டி.சி பிரபாகர்

இந்தசூழலில் தான், இரண்டாவது நாள் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, சட்டப்பேரவை முன்னாள் செயலாளர் சி.கு. ராமசாமி ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, இயக்குநர் பாரதிராஜா, கே. ராஜன் மற்றும் பாரதிராஜா ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

Spread the love