July 3, 2026

தமிழ்நாட்டிற்கு இடைத்தேர்தல் தேதி ஏன் அறிவிக்கப்படவில்லை? பின்னணியில் நடக்கும் அரசியல் நகர்வுகள்- இதுதான் காரணம்

3 மாநிலங்களில் காலியாக உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த இடைத்தேர்தலானது ஜூலை 30-ம் தேதி நடைபெற உள்ளது இதற்கான வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 3ம் தேதி நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் இதுவரை ஏழு சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் இந்த அறிவிப்பை தேர்தல் கமிஷன் தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்த விஜய்

இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இருக்கும் அதற்கு எம்எல்ஏக்கள் அதிமுகவிலிருந்து தொடர்ந்து தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதும், அதிமுக திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பாரபட்சமின்றி குதிரை பேரம் நடப்பதாக குற்றம் சாட்டி வருவது தான்.குறிப்பாக, தமிழக முதல்வராக இருக்கும் விஜய் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை கடந்த மே மாதம் ராஜினாமா செய்தார்.

அதிமுக எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா:

அதனைத் தொடர்ந்து மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ மரகதம் குமரவேல் பெருந்துறை சட்டமன்ற தொகுதி ஜெயக்குமார் தாராபுரம் சட்டமன்ற தொகுதி சத்யபாமா அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி இசக்கி சுப்பையா கரூர் எம்எல்ஏ விஜயபாஸ்கர் விராலிமலை எம்எல்ஏ சி விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். இதில் கரூர் விராலி மலையை தவிர்த்து மற்ற ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் மும்மூரம் காட்டி வருகிறது.

அதிமுக தரப்பில் ஆளுநரிடம் புகார்:

இந்த நிலையில் தான் அதிமுக தரப்பில் இருந்து உச்ச நீதிமன்றத்திலும், ஆளுநர் அர்லேகரை சந்தித்து மனு அளித்தனர்.அந்த மனுவில் பதவி விலகிய ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என்று வலியுறுத்தி, அதிமுக சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த ராஜினாமாக்கள் தொடர்பாக எழுந்துள்ள குதிரைப்பேரம் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும், அந்த விசாரணை நிறைவடையும் வரை ராஜினாமா செய்யப்பட்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கவோ நடத்தவோ கூடாது என்றும் தேர்தல் ஆணையத்திடம் அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் தள்ளிபோக காரணம் என்ன?

தொடர்ந்து தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு எம்.எல்.ஏக்கள் ராஜனாமா செய்வது குதிரை பேரம் நடத்திருப்பதாக கூறப்படும் நிலையில் இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் விசாரணை நடத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் தவெகவுக்கு மெஜாரிட்டி இல்லை. தற்போது தவெகவிடம் 107 தொகுதிகள் உள்ள நிலையில், அதிமுகவில் இருந்து இதுவரை 7 எம்.எல்.ஏக்கள் இணைந்ததன் காரணமாக எண்ணிக்கை 114 உயர்ந்துள்ளது.மேலும் 118 என்ற பெரும்பான்மையை நிருப்பிக்க இன்னும் 4 எண்கள் தேவை என்பதால்,அதிமுகவில் இருந்து விலக எம்.எல்.ஏக்கள் போகிறார்கள் என்பதற்காக இடைத்தேர்தலை தள்ளிபோட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

திமுக மற்றும் தவெகவை விசாரிக்கும் தேர்தல் ஆணையம்?

அதுமட்டுமில்லாமல், மறுப்புறம் திமுகவினர் தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்காக தவெக எம்.எல்.ஏக்களிடம் பணம் குறித்து பேரம் பேசியதாக கூறப்படுகிறது. இதனை விசாரிப்பதற்காகவும் இடைத்தேர்தலை தள்ளிபோட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் குதிரை பேரம் குற்றச்சாட்டு திமுக மற்றும் தவெக மீது முன்வைக்கப்படுகிறது.இந்த விசாரணையில் குற்றம் நிருப்பிக்கப்பட்டால்,எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது. மேலும் அவர்களால் தேர்தலில் போட்டியிட முடியாது. பின்னர் ஆட்சி கலைக்கப்பட்டு மறுத்தேர்தல் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Spread the love