July 4, 2026

‘‘​பாகிஸ்தான் தலை​வர்​களு​டன் பேசுவது நேரத்தை வீணடிக்​கும் செயல்’’ – சிங்கப்பூர் முன்னாள் தூதர் அனுபவ பகிர்வு

சிங்கப்பூர்: ‘‘​பாகிஸ்தான் தலை​வர்​களு​டன் பேசுவது நேரத்தை வீணடிக்​கும் செயல்’’ என சர்​வ​தேச கருத்​தரங்கு ஒன்​றில் சிங்கப்பூர் முன்​னாள் தூதர் பிலஹரி கவுசிகன் கருத்து தெரிவித்து உள்​ளார். சர்​வ​தேச கருத்​தரங்​கம் ஒன்று நடந்த போது பாகிஸ்​தான் பத்​திரி​கை​யாளர் ஒரு​வர், பாகிஸ்​தானுக்கு அண்டை நாடு​களான இந்​தியா மற்​றும் ஆப்​கானிஸ்​தா​னால் பிரச்​சினை ஏற்​படு​கிறது என கூறி​னார்.

அப்​போது அந்த கருத்​தரங்​கில் பங்​கேற்ற சிங்​கப்​பூர் முன்​னாள் தூதர் பிலஹரி கவுசிகன் கூறிய​தாவது: பாகிஸ்​தானின் பிரச்சினை​களுக்கு அதன் தலை​வர்​கள் மற்​றும் ராணுவத்​தின் தவறான நிர்​வாகம்​தான் காரணம். பாகிஸ்​தான் பெரும்​பாலான பிரச்​சினை​களை தானாக தேடிக்​கொள்​கிறது. இதற்​கெல்​லாம் பாகிஸ்​தான் இருப்​பிடத்தை குறை கூற முடி​யாது. பாகிஸ்​தான் தலை​வர்​களு​டன் பேசுவது நேரத்தை வீணடிக்​கும் செயல். இதற்கு ஒரு சம்​பவத்தை குறிப்​பிட விரும்​பு​கிறேன்.

கடந்த 1991-ம் ஆண்டு மலேசி​யா​வில் இருந்து புறப்​பட்ட சிங்கப்பூர் ஏர்​லைன்ஸ் விமானம் பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் 4 பேரால் கடத்​தப்​பட்​டது. அந்த விமானம் சிங்​கப்​பூரின் சாங்கி விமான நிலை​யத்​தில் தரை​யிறங்​கியது. கடத்​தல்​காரர்​கள் விமானத்​தில் ஆல்​கஹாலை ஊற்றி பற்ற வைத்​து​விடு​வோம் என மிரட்​டினர். அப்​போது நான் வெளி​யுறவுத்​துறை​யில் பணியாற்றியதால், கடத்​தல்​காரர்​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்தும் பொறுப்பு என்​னிடம் விடப்​பட்​டது.

கடத்​தல்​காரர்​களின் கோரிக்கை குறித்து கேட்​ட​போது, அவர்​கள் பாகிஸ்​தான் முன்​னாள் பிரதமர் பெனசிர் புட்​டோ​விடம் பேச வேண்​டும் என கூறினர். அப்​போது பாகிஸ்​தான் பிரதம​ராக நவாஸ் ஷெரிப் இருந்​தார். பெனசிர் புட்டோ இஸ்​லாமாபாத்​தில் இல்​லை. அவர் சிந்து பகு​தி​யில் உள்ள தனது எஸ்​டேட்​டுக்கு சென்று​விட்​டார். பாகிஸ்​தான் தூதர் மூலம் அவரது போன் எண்-ஐ பெற்று அதி​காலை 3 மணி​யள​வில் தொடர்பு கொள்ள முயன்றேன்.

நான் நில​வரத்தை கூறி, பெனசிர் புட்​டோ​விடம் பேச வேண்​டும் என கூறினேன். அதற்கு பதில் அளித்த நபர் ‘‘மேடம் தூங்கி கொண்டிருக்​கிறார். அவரை தொந்​தரவு செய்ய முடி​யாது’’ என தொடர்ந்து கூறி​னார். இதனால் வெறுப்​படைந்து அந்த போன் இணைப்பை துண்​டித்​தேன். இறு​தி​யில் எங்​கள் கமாண்​டோக்​கள் விமானத்​துக்​குள் சென்று கடத்​தல்​காரர்​கள் 4 பேரை​யும் சுட்​டுக் கொன்று பயணி​களை பத்​திர​மாக மீட்​டனர். இதனால் தீவிரவாதிகளின் கோரிக்கை என்ன என்று எங்​களுக்கு இது​வரை தெரி​யாது. இவ்​வாறு கவுசிக​ன்​ தெரிவித்​தார்​.

Spread the love