அதிமுக சார்பில் வரும் 25 ம் தேதி ஆர்ப்பாட்டம்
பழனி ஜூலை 23
பழனியில் நில மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அதிமுக சார்பில் வரும் 25ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. பழனியில் நேற்று திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளரும், அதிமுக முன்னாள் எம்எல்ஏவுமான வி பி பி பரமசிவம் நேற்று பழனிக்கு வருகை புரிந்தார். பின்பு அவர் தனியார் திருமண மண்டபத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:
பழனி தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான நிலத்தை முறை கேடாக பத்திரப்பதிவு செய்து அபகரித்து இருப்பது ஆன்மீக பெரியோர்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. உயர்மட்ட அழுத்தம் இல்லாமல் இந்த மோசடி நடந்திருக்க வாய்ப்பில்லை. இதில் இந்து சமய அறநிலைத்துறை பத்திரப்பதிவுத்துறை வருவாய்த்துறை எனும் மூன்று துறைகளும் சம்பந்தப்பட்டு இருப்பதால், மாநில காவல்துறையின் சிபிசிஐடி விசாரணை போதுமானதாக இருக்காது. எனவே சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். அதை வலியுறுத்தி வரும் ஜூலை 25ஆம் தேதி சனிக்கிழமை அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மேலும் தமிழகம் முழுவதும்கொடையாக வழங்கப்பட்ட கோவில் சொத்துக்கள் மற்றும் நிலங்களின் விவரங்களை அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வழிகாட்டுதல் படி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார். இதில் முன்னாள் எம்எல்ஏ வேணுகோபாலு, நகரச் செயலாளர் முருகானந்தம், ஒன்றிய செயலாளர்கள் டி.முத்துச்சாமி, ஆர் எம் டி சி மாரியப்பன், நடராஜன், பொதுக்குழு உறுப்பினர் ராஜா முகமது, பேரூர் செயலாளர்கள் பாலசமுத்திரம் சக்திவேல், ஆயக்குடி சசிகுமார், நெய்க்காரப்பட்டி விஜய சேகரன் ஆகியோர் உள்பட ஏராளமானோர் அதிமுகவினர் பங்கேற்றனர்

More Stories
ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் புதிய ஓடும் தொழிலாளர் ஓய்வு அறை
அதிமுக பொதுச் செயலாளரை சந்தித்த நிர்வாகிகள்
தமிழக அரசின் சாதனை திட்ட புகைப்பட கண்காட்சி