February 7, 2026

சைக்கிள் சுற்றுலாவில் சபா முன்னிலை: ‘Sabah Cycling Paradise’  மலேசியா  டூரிசம் மூலம் சென்னை புதிய முயற்சி   சென்னை  : டூரிசம் மலேசியா சென்னை, சபா சுற்றுலா வாரியத்துடன் இணைந்து, ராயல் புருணை ஏர்லைன்ஸ் மற்றும் Trek Finder Tours ஆதரவுடன், 24 முதல் 29 ஜனவரி 2026 வரை “Sabah Cycling Paradise” எனும் சைக்கிள் மையப்படுத்திய FAM பயணத்தை வெற்றிகரமாக நடத்தியது. இந்தியாவில் இருந்து சபாவுக்கு நடத்தப்பட்ட முதல் சைக்கிள் சுற்றுலா அறிமுக நிகழ்வு இது அமைந்தது.

சென்னையைச் சேர்ந்த சைக்கிள் ஆர்வலர்கள் இந்த 6 நாள் பயணத்தில் கோட்டா கினபாலு, கோட்டா பெல்ட், கோட்டா மருடு, குட், குண்டா சாங் மற்றும் தாம்பருலி போன்ற இடங்களில் கடற்கரை, மலைப்பகுதி மற்றும் பண்பாட்டு நகரங்கள் வழியாக சைக்கிள் சவாரி செய்து சபாவின் இயற்கை அழகை அனுபவித்தனர்.

இந்த பயணத்தை சபா சுற்றுலா வாரிய தலைமை நிர்வாக அதிகாரி ஜுலியஸ் ஜெஃப்ரி ஜிமிட் துவக்கி வைத்தார். டூரிசம் மலேசியா சென்னை இயக்குநர் ஹிஷாமுத்தீன் முஸ்தபா, சைக்கிள் மற்றும் அனுபவம் சார்ந்த சுற்றுலா மூலம் உயர்தர பயணிகளை ஈர்க்கும் திட்டமாக இதை விளக்கினார்.

Visit Malaysia Year 2026 மற்றும் Visit Sabah 2027 முன்னெடுப்புகள் உடன் இணைந்து, சபாவை சைக்கிள் மற்றும் ஈகோ சுற்றுலா மையமாக இந்திய சந்தையில் முன்னிறுத்த டூரிசம் மலேசியா சென்னை தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. “Sabah Cycling Paradise – Ride the Beauty of Borneo” என்ற வாசகத்துடன், சபா உலக சுற்றுலா பயணிகளை வரவேற்கிறது.

Spread the love