சென்னை: உத்தரபிரதேச மாநிலம் அலிகரை சேர்ந்த அமன்(24) என்ற இளைஞர், தமிழக முதல்வர் விஜய்யின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு அவரின் தீவிர ரசிகராக மாறியுள்ளார்.
விஜய்யை நேரில் சந்திப்பதற்காக உத்தரபிரதேசத்தில் இருந்து நடைப்பயணம் மேற்கொண்டு தற்போது தமிழகம் வந்துள்ளார்.
கடந்த ஜூலை 3-ம் தேதி அலிகரில் தனது பயணத்தை தொடங்கிய அமன் சுமார் 25 நாட்களுக்கு பின்னர் நேற்று சென்னை வந்தடைந்தார். தலைமைச் செயலகம் வந்தவரை முறையான முன்அனுமதி இல்லாததால் காவல்துறையினர் அனுமதிக்கவில்லை.
இதுதொடர்பாக, அவர் நிருபர்களிடம் கூறுகையில், “தமிழகத்தின் மக்கள் நலன் சார்ந்த ஆட்சிக்காக முதல்வர் விஜய்க்கு நேரில் வாழ்த்து தெரிவிக்க நடைபயணமாக வந்துள்ளேன். மேலும், பலர் தனது பயணத்தின் நோக்கம் குறித்து கேட்டறிந்தனர்.
தேசப்பற்றை வலியுறுத்தும் விதமாக தேசியக் கொடியுடன் பயணம் செய்தேன். முதல்வர் விஜய் தேசிய அரசியலில் பங்காற்ற வேண்டும். அவரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்”என்றார்.

More Stories
“கனிம வளப் பாதுகாப்பில் தவெக அரசு உறுதியான கொள்கை அறிவிப்பை வெளியிட வேண்டும்” – தி.வேல்முருகன்
151 உயர்சிறப்பு மருத்துவ படிப்பு இடங்களை கைவிட்ட தவெக அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கண்டனம்!!
ஒன்றிய அளவிலான கபடி போட்டி பள்ளபட்டி அரசு பள்ளி மாணவிகள் சாம்பியன் பட்டம் வென்று சாதனை.