புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் நடைபாதை ஒன்றில் முடி திருத்தும் தொழிலாளி ஹரிநாத் சர்மா கடைவைத்திருந்தார். அவ்வழியாக சென்ற லாரி அவரது கடை மீது மோதியது. இதில் ஹரிநாத் சர்மா படுகாயமடைந்தார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த மோட்டார் வாகன இழப்பீட்டுத் தீர்ப்பாயம் அவருக்கு ரூ.1,71,350 இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
ஆனால் நடைபாதையை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கடையை நடத்தியதால் விபத்தில் அவருக்கும் பங்கு உள்ளது. அவரின் செயல் ‘கூட்டு அலட்சியம்’ என கருதப்பட்டதால் இழப்பீட்டுத் தொகையில் 30% குறைக்கப்பட்டது.
இதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஹரிநாத் சர்மா மேல்முறையீடு செய்தார், அந்த மனுவை விசாரித்த நீதிபதி அனீஷ் தயாள் வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது: நடைபாதையில் ஒரு நபர் நடந்து செல்பவராகவோ அல்லது அங்கு உறங்குபவராகவோ இருந்தாலும் விபத்துக்கான ‘கூட்டு அலட்சியத்துக்கு’ பொறுப்பானவராகக் கருத முடியாது.
நடைபாதையில் கடை வைத்திருந்ததற்காக விபத்து ஏற்படுத்தியதில் அவருக்கும் பங்கு உண்டு என்றும் கூட்டு அலட்சியம் எனவும் கூறி இழப்பீட்டுத் தொகையைக் குறைக்க முடியாது எனவே, விபத்தில் காய மடைந்த ஹரிநாத் சர்மாவுக்கு மொத்த இழப்பீட்டுத் தொகையான ரூ.1,71,350.யை வழங்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Stories
தலைமை நீதிபதி, பார் கவுன்சில் தலைவர் வருகைக்கு எதிர்ப்பு: பெங்களூரு தேசிய சட்டப் பல்கலை. 34-வது பட்டமளிப்பு விழா ரத்து
தமிழக முதல்வர் விஜய் பிரதமராக 9.2% பேர் ஆதரவு
37.5 டன் நிவாரணப் பொருட்களுடன் நேபாளம் சென்றது இந்தியாவின் 2வது விமானம்