August 28, 2026

நடைபாதை கடை என்பதற்காக இழப்பீட்டை குறைக்க முடியாது: டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் நடை​பாதை ஒன்​றில் முடி திருத்​தும் தொழிலாளி ஹரி​நாத் சர்மா கடைவைத்​திருந்​தார். அவ்வழி​யாக சென்ற லாரி அவரது கடை மீது மோதி​யது. இதில் ஹரி​நாத் சர்மா படு​காயமடைந்​தார். இதுதொடர்​பான வழக்கை விசா​ரித்த மோட்​டார் வாகன இழப்​பீட்​டுத் தீர்ப்​பா​யம் அவருக்கு ரூ.1,71,350 இழப்​பீடு வழங்க உத்​தர​விட்​டது.

ஆனால் நடை​பாதையை சட்​ட​விரோத​மாக ஆக்​கிரமித்து கடையை நடத்​தி​ய​தால் விபத்​தில் அவருக்​கும் பங்கு உள்​ளது. அவரின் செயல் ‘கூட்டு அலட்​சி​யம்’ என கருதப்​பட்​ட​தால் இழப்பீட்டுத் தொகை​யில் 30% குறைக்​கப்​பட்​டது.

இதனை எதிர்த்து டெல்லி உயர் நீதி​மன்​றத்​தில் ஹரி​நாத் சர்மா மேல்​முறை​யீடு செய்​தார், அந்த மனுவை விசா​ரித்த நீதிபதி அனீஷ் தயாள் வழங்​கிய தீர்ப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: நடைபாதை​யில் ஒரு நபர் நடந்து செல்​பவ​ராகவோ அல்​லது அங்கு உறங்​குபவ​ராகவோ இருந்​தா​லும் விபத்​துக்​கான ‘கூட்டு அலட்சியத்​துக்​கு’ பொறுப்​பானவ​ராகக் கருத முடி​யாது.

நடை​பாதை​யில் கடை வைத்​திருந்​ததற்​காக விபத்து ஏற்படுத்தியதில் அவருக்​கும் பங்கு உண்டு என்​றும் கூட்டு அலட்சியம் எனவும் கூறி இழப்​பீட்​டுத் தொகை​யைக் குறைக்க முடி​யாது எனவே, விபத்​தில் காய மடைந்த ஹரி​நாத் சர்மாவுக்கு மொத்த இழப்பீட்டுத் தொகை​யான ரூ.1,71,350.யை வழங்க வேண்டும். இவ்வாறு தீர்ப்​பில்​ தெரிவிக்​கப்​பட்டுள்ளது.

Spread the love