September 3, 2026

ராமநாதபுரம் மாவட்டம்

கீழக்கரையில் சமூக நாய்கள் பிடிக்கும் பணி

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித் திரியும் சமூக நாய்களை கட்டுப்படுத்தும் வகையில், நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நாய்கள் பிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதன் கீழ் 491 சமூக நாய்களுக்கு ABC (கருத்தடை) மற்றும் ARV (வெறிநாய்க்கடி தடுப்பூசி) பணிகள் மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிடிக்கப்படும் நாய்களுக்கு சிகிச்சை மற்றும் தடுப்பூசி வழங்கப்பட்டு, பின்னர் உரிய பராமரிப்புடன் கண்காணிக்கப்படுகின்றன.

இப்பணியை நகராட்சி ஆணையர் கிருஷ்ணவேணி, சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா மற்றும் நகராட்சி பணியாளர்கள் நேரில் பார்வையிட்டு ஒருங்கிணைத்தனர்.

Spread the love