செப் -10
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் குன்னத்தூர் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கலைப்பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் தேசியம் பி.குமார் விழாவிற்கு தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் அத்திக்காடு என்.ஏ.சுப்பிரமணி வரவேற்புரை வழங்கினார்.சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கொங்கு மண்டல எஸ்.எஸ்.ஏ. ஒருங்கிணைப்பாளர் தனிகாசலம், கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, புதிய அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட தலைவர் கோபால்சாமி, திருப்பூர் மாநகர் மாவட்ட மேலிடப் பொறுப்பாளர் துரைராஜ், முன்னாள் தலைவர் கிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளர் கே.பி.ஜி. செந்தில்குமார் உள்ளிட்ட மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், கலைப்பிரிவு நிர்வாகிகள், காங்கிரஸ் தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.புதிய அலுவலகம் திறக்கப்பட்டதையொட்டி பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

More Stories
திருச்சுழி
தேனி
திருப்பூர் அண்ணாநகரில் சுடலை மகாராஜா கோவில் பொங்கல் விழா.. பெண்கள் மாவிளக்கு எடுத்து சிறப்பு வழிபாடு