இந்தியாவில் அறிமுகமாகவுள்ள ஹூண்டாய் பேயான் கார் பற்றி…
பிரிட்டனில் விற்பனையிலுள்ள ஹூண்டாய் பேயான் Photo: Hyundai website
ஹூண்டாய் நிறுவனம், பேயான் என் லைன் காரை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே, இந்தியாவில் நடைபெற்று வரும் இந்த காரின் சோதனை ஓட்டம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
சர்வதேச சந்தைகளில் விற்பனையில் உள்ள பேயான் மாடல் கார் தற்போது சில அப்டேட்களுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
ஏற்கெனவே சந்தையில் உள்ள ஹூண்டாய் ஐ-20 மாடலிவிட சற்று மாறுபட்ட ஸ்போர்ட்டியான தோற்றத்தில், சிறிது பெரிதாக பேயான் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாருதி ஃப்ராங்ஸ் மாடல் காருக்கு போட்டியாக பேயான் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேயான் மாடலின் முன்புற பம்பர்கள், கிரில்கள், ஏர் டாம் ஆகியவை வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. எல்.டி. ஹெட்லைட்கள் மற்றும் டி.ஆர்.எல். தொழில்நுட்பங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த காரில் 1.2 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், வெனு மற்றும் ஐ20 மாடல்களில் உள்ள 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் தேர்வும் கொடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய சந்தையில் வருகின்ற அக்டோபரில் அறிமுகமாக வாய்ப்புள்ளது. இந்த காரின் விலை ரூ. 8 முதல் 12 லட்சம் வரை இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More Stories
‘நாங்கள் ஏழையாக வாழ வேண்டுமா?’ – பிஹார் எம்எல்ஏ மைதிலிக்கு ஆதரவாக கங்கனா கேள்வி
திருப்பதி பிரம்மோற்சவ விழா சர்வ தரிசனத்துக்கு 8 கி.மீ. தூரம் நடக்க வேண்டுமா? – பக்தர்கள் அதிருப்தி
‘பிரதமர், அவரது தாய் குறித்த பேச்சு தரக்குறைவானது’ – ராகுல் காந்திக்கு பாஜக மூத்த தலைவர்கள் கண்டனம்