பழனி செப்டம்பர் 21
பழனி ரயில் உபயோகிப்போர் நலச்சங்கம் சார்பாக, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில செயலாளரும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பழனி மாவட்ட தலைவர் J.B.சரவணன், வணிகர் சங்க மாநில இணைச் செயலாளர் சரவண பொய்கை கந்த விலாஸ் என்.பாஸ்கரன் , வணிகர் சங்க மாவட்ட செயலாளர் வள்ளுவர் தியேட்டர் என்.செந்தில்குமார், ஆகியோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கும் மற்றும் அந்த அமைப்புகளுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இதில் ரயில் உபயோகிப்போர் நல சங்க தலைவர் நாகேஸ்வரன், செயலாளர் சீனிவாசன், பொருளாளர் பாலு உட்பட நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
பழனிக்கு வரும் பக்தர்களுக்கு அதிக அளவில் தொல்லை கொடுக்கும் திருநங்கைகளுக்கு அறிவுரை வழங்கி, அவர்கள் வாழ்வாதாரத்திற்கு வேறு மாற்று ஏற்பாடு பண்ண வேண்டும்.
பழனி டு சென்னை இரவு ஒன்பது மணிக்கு ஒரு ரயில் விட வேண்டும். ஏனென்றால் பழனி மலையில் பக்தர்கள் தங்கத்தேர் பார்த்துவிட்டு ஒன்பது மணிக்கு தான் கீழே இறங்குகிறார்கள்
தாராபுரம் ரோட்டில் மேம்பாலம் அமைக்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதின் எதிரொலியாக, மேம்பால வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கு நன்றி தெரிவித்தனர்.
ரயில் நிலையத்திற்கும், பழனி மலைக்கும் பேட்டரி கார் விட வேண்டும்.
இதேபோல் பெரியாவுடையார் கோவிலுக்கும் பழனி மலைக்கும் பேட்டரி கார் விட வேண்டும். என இது போன்று பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

More Stories
கீழக்கரையில் பன்றிகள் அப்புறப்படுத்தல்
அமைச்சர்கள் முன்னிலையில் சமுதாய வலைகாப்பு!
கரூர் மாவட்டம்