சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.1,11,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார நிலைமைகள், அமெரிக்க டாலரின் மதிப்பு மாற்றம், வட்டி விகித ஏற்றத்தாழ்வுகள், புவியியல் அரசியல் பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.1,05,520க்கு விற்பனையானது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ரூ.13,815க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதே போல நேற்று சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245க்கு விற்பனை செய்யப்பட்டது.

More Stories
ஜிமெயில் போல வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பும் புதிய வசதி
3 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் உயர்தர உணவு அறிமுகம்
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை – இன்றைய சந்தை நிலவரம் என்ன?