சென்னை: அரசு கலை கல்லூரிகளில் காலியாகவுள்ள உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களை நிரப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பி.விஸ்வநாதன் தெரிவித்தார்.
அரசு கல்லூரிகளில் விளையாட்டு மேம்பாட்டு செயல்பாடுகள் குறித்து உடற்கல்வி இயக்குநர்களுக்கான கூட்டம் உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் தலைமையில் சென்னை பல்கலைக்கழக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.
இதில் கல்லூரி கல்வி இணை இயக்குநர் (திட்டம் மற்றும் வளர்ச்சி) சிந்தியா செல்வி, சென்னை மண்டல இணை இயக்குநர் து.தங்கராஜ், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் எஸ்.ஆம்ஸ்ட்ராங், பதிவாளர் ரீட்டா ஜான் ஆகியோரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற உடற்கல்வி இயக்குநர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
தொடர்ந்து அமைச்சர் விஸ்வநாதன் பேசியதாவது: தமிழகத்தில் மொத்தமுள்ள அரசு கலை கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உடற்கல்வி இயக்குநர் பணியிடங்கள் நிரப்பப்படும்.
விளையாட்டுத் துறையை மேம்படுத்த செயல்திட்டத்தை தயாரித்து முதல்வரிடம் வழங்க உள்ளோம். வெளிநாடுகளில் நடைபெறும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு அரசு சார்பில் விமான பயணச்சீட்டு வழங்கப்படும். இவ்வாறு பேசினார்.

More Stories
‘உதவும் கை’ எனும் பெயரில் வெள்ள நிவாரண உதவி மையம்: காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் திறந்து வைத்தார்
இந்து தமிழ் திசை ‘பெண் இன்று’ சார்பில் சென்னையில் நாளை மகளிர் திருவிழா கொண்டாட்டம்
ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை குழுமத்துக்கு புதிய தலைவர், உறுப்பினர்கள் நியமனம்: முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்றனர்