November 2, 2026

ம.பி.யில் வினாடி வினாவில் வென்றவர்களுக்கு ராயல் என்பீல்டு பைக், டிராக்டர்கள் பரிசு

போபால்: மத்​திய பிரதேச அரசு, விவசாயி நல ஆண்​டைக் கொண்​டாடும் வகை​யில், மாணவர்​களிடையே வினாடி வினாப் போட்​டிகளை நடத்​தி​யது. முதல்வர் மோகன் யாத​வின் ‘வீர் பாரத் நியாஸ்’ மற்​றும் ‘கிருஷ்ணா பாதே’ மற்​றும் ‘கிசான் கல்​யாண் ஸ்வாபிமான் பர்வ்’ போன்ற திட்​டங்​கள் மூலம் அரசு நலத்​திட்டங்களை மக்​களிடம் கொண்டு சேர்ப்​பது இதன் முக்​கிய நோக்​க​மாகும்.

பகவான் கிருஷ்ணரின் 14 வித்​தைகள் மற்​றும் 64 கலைகளை அடிப்​படை​யாகக் கொண்டு போட்​டிகள் நடத்​தப்​பட்​டன. இதில் பங்​குபெற்று வெற்றி பெற்ற 102 மாணவர்​களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்​கப்​பட்​டது.

பல முஸ்​லிம் மாணவர்​களும் இதில் ஆர்​வ​முடன் கலந்​து​கொண்டு பரிசுகளை வென்​றனர். 55 மாவட்டங்​களைச் சேர்ந்த 165 விவசாயிகள் குலுக்​கல் முறை​யில் தேர்ந்​தெடுக்​கப்​பட்டு, அவர்​களுக்கு ரூ.6.5 கோடி மதிப்​பிலான டிராக்​டர்​கள் மற்​றும் ராயல் என்​பீல்டு பைக்​கு​கள், மின்​சார ஸ்கூட்​டர்​கள் பரிசாக வழங்​கப்​பட்​டன.

Spread the love