புதுடெல்லி: அக்னிபத் திட்டத்தின் கீழ் முப்படைகளில் பணியாற்றும் அக்னி வீரர்களின் பணிக்காலத்தை 4 ஆண்டுகளில் இருந்து 6 ஆண்டுகளாக நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. ஏற்கெனவே 25 சதவீத வீரர்களுக்கு நிரந்தரப் பணி வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 75 சதவீத வீரர்களுக்கு கூடுதலாக 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்படவுள்ளது.
நீட்டிக்கப்பட்ட பணிக்காலத்துக்குப் பிறகு தகுதி மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் நிரந்தர நியமனம் பெறவும் வாய்ப்பு வழங்கப்படும். அடுத்த மாதம் பணிக்காலம் முடிவடையவிருந்த சுமார் 18,000 வீரர்கள் இதனால் பயனடைவார்கள். இம்முடிவுக்காக பிரதமர் மோடிக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நன்றி தெரிவித்துள்ளார்.

More Stories
ஆன்லைன் மோசடியில் பணம் இழந்தால் ரூ.25,000 இழப்பீடு!
அரசுடைமை வங்கியை வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்க ஒன்றிய அரசு முடிவு; ராகுல் காந்தி கண்டனம்..!
ஐவிஎப் சிகிச்சையில் ஏற்பட்ட தோல்வி ‘மோசடி’ அல்ல: அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து