November 19, 2026

காலை உணவில் கவனிக்க வேண்டிய 4 உணவுகள்!

இரவு உணவுக்குப் பிறகு நீண்ட இடைவெளியில் எடுத்துக்கொள்ளும் காலை உணவு, உடலுக்குத் தேவையான சத்தும் சக்தியும் அளிப்பதாக இருக்க வேண்டும். காலை உணவாகப் பலரும் சாப்பிடும் சில உணவுகள் குறித்து இக்கட்டுரை குறிப்பிடுகிறது.

1. காபி அல்லது தேநீருடன் பிஸ்கட்

காபி, தேநீர் மற்றும் பிஸ்கட்டை மட்டும் காலை உணவாக எடுத்துக்கொள்வதைத் தவிர்த்து, சத்தான உணவையும் சேர்த்துச் சாப்பிட வேண்டும். பிஸ்கட்டுக்குப் பதிலாகப் பருப்பு வகைகள் அல்லது முட்டையை எடுத்துக்கொள்ளலாம்.

2. பிரட் டோஸ்ட் மற்றும் பழச்சாறு

இவற்றை மட்டும் சாப்பிடுவதற்குப் பதிலாக, நார்ச்சத்து கிடைக்க முழுப் பழத்தையும், புரதத்துக்காக முட்டையையும் சேர்த்துக்கொள்ளலாம்.

3. பாலுடன் கார்ன்ஃபிளாக்ஸ்

சர்க்கரை சேர்க்கப்பட்ட கார்ன்ஃபிளாக்ஸ் மற்றும் காலை உணவுத் தானியங்களுக்குப் பதிலாக, வீட்டில் தயாரிக்கும் சத்து மாவுக் கஞ்சி போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

4. சான்ட்விச்

மைதா ரொட்டி மற்றும் அதிகப்படியான சாஸ் சேர்த்த சான்ட்விச்சுக்குப் பதிலாக, முழுத்தானிய அல்லது சிறுதானிய ரொட்டியில் முட்டை, காய்கறிகள் அல்லது பன்னீர் சேர்த்துச் சாப்பிடலாம்.

Spread the love