November 26, 2026

மரணத்திலும் மனிதநேயம்: மருத்துவக் கல்விக்காக உடல் தானம்

திருப்பூர்: காங்கேயம் சாலை ராக்கியாபாளையத்தைச் சேர்ந்த ஆடிட்டர் அன்பழகனின் தாயார் காந்திமதியம்மாள் (86), வயது மூப்பு காரணமாக இன்று காலை உயிரிழந்தார்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய காலம் முதல் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வரும் அன்பழகன், அக்கட்சியின் மாநில ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினராக உள்ளார்.

காந்திமதியம்மாள், உயிரிழப்பதற்கு முன்பே தனது உடலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்க ஒப்புதல் அளித்திருந்தார். அதன்படி, அவரது உடலை மகனும் உறவினர்களும் மதிமுக நிர்வாகிகள் மற்றும் பெரியாரிய உணர்வாளர்களுடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் சண்முகப்பிரியாவிடம் ஒப்படைத்தனர். மருத்துவ மாணவர்களின் கல்விக்காக அவரது உடல் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மதிமுகவின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். காந்திமதியம்மாளின் உடலைத் தானமாக வழங்கிய அன்பழகன் குடும்பத்தினரை மருத்துவமனை சார்பில் பாராட்டி, சான்றிதழ் வழங்கப்பட்டது.

Spread the love