November 27, 2026

பள்ளிக்கரணை சதுப்பு நில விவகாரம்: பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

புதுடெல்லி: சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தொடர்​பாக தாமாக முன்​வந்து விசா​ரணை மேற்​கொண்ட தென் மண்​டல தேசிய பசுமை தீர்ப்​பாயம், பள்​ளிக்​கரணை சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கி.மீ. சுற்​றளவுக்கு எந்த கட்​டு​மானங்​களுக்​கும் ஒப்புதல் வழங்​கக் கூடாது என உத்​தர​விட்​டது

இந்த உத்​தர​வால் பள்​ளிக்​கரணை பகுதி​களைச் சுற்​றியுள்ள பகுதி​களில் அடுக்​குமாடி கட்​டு​மானப் பணிகள் முழு​மையாக தடைப்பட்​டுள்​ள​தாகக் கூறி ரியல் எஸ்​டேட் நிறு​வனங்​களின் கூட்​டமைப்​பான ‘கிரெடாய்’ சார்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது.

அந்த வழக்கை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்​றம், சதுப்பு நிலம் தொடர்​பாக உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு நிலுவை​யில் உள்​ள​தால், இந்த விவகாரம் குறித்து உச்ச நீதி​மன்​றத்தை அணுகும்​படி ‘கிரெடாய்’ உள்​ளிட்ட மனுதா​ரர்​களுக்கு உத்​தர​விட்​டது.

அதேவேளை​யில், சதுப்பு நிலத்​தின் எல்லையை வரையறை செய்​யும் பணிகளை விரைந்து முடிக்க தமிழ்​நாடு மாநில சதுப்பு நில ஆணை​யத்​துக்கு உத்​தர​விட்​டது.

இந்த உத்​தரவை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறையீடு செய்​யப்​பட்​டால், தனது தரப்பு வாதத்​தையும் கேட்ட பின்​னரே வழக்​கில் உத்​தரவை பிறப்​பிக்க வேண்​டும் என்பதை வலியுறுத்தி, பசுமைத் தாயகம் அமைப்​பின் தலை​வர் சவுமியா உச்ச நீதி​மன்​றத்​தில் கேவியட் மனு தாக்​கல் செய்​துள்​ளார்.

Spread the love