November 27, 2026

நவ. 30-ல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா?

நவம்பர் 30-ம் தேதி லோக்சபா சிறப்பு அமர்வு நடைபெறும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். தொகுதி மறுவரையறையுடன் இணைக்கப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மசோதா நிறைவேற 540 உறுப்பினர்களில் 361 பேரின் ஆதரவு தேவை. இதுகுறித்து பிரதமர் மோடி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். மறுபுறம், சிறப்பு அமர்வில் எதிர்க்கட்சிகளின் வியூகம் குறித்து சோனியா காந்தி காங்கிரஸ் எம்.பி.,க்களுடன் ஆலோசிக்க உள்ளார்.

Spread the love