பழனி பிப்ரவரி 13
பழனி முருகன் கோவிலில் படிப்பாதை, யானை பாதை ஆகிய பகுதிகளில் பக்தர்களின் பொருட்கள் மற்றும் கோயிலுக்கு வந்து காணாமல் போனவர்கள் பற்றிய விவரம் அடிக்கடி கோயில் ஒலி பெருக்கியில் ஒலி பரப்பப்படும். இந்நிலையில் யானை பாதையில் வந்த ஒரு வாலிபர் த.வெ.க தலைவர் நடிகர் விஜயின் பாடலை ஒலிக்கச் செய்தார். இதனால் பக்தர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் யானை பாதையில் மைக் செட் உள்ள ஒரு இடத்தில், ஒரு வாலிபர் தனது செல்போனில் இருந்த விஜய் பாடலை மைக் மூலம் ஒலி பரப்பு செய்தார். அதை மற்றொரு நபர் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பரப்பி விடுகிறார். இது பற்றி கோயில் நிர்வாகம் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

More Stories
செவிலியர்கள் போராட்டம்: 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்..
ஒட்டன்சத்திரம்விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள்டாக்டர் தொல். திருமாவளவன் எம்.பி., அறிவிப்பு
பழனியில் ஹோட்டல்கள் ரெஸ்டாரண்ட் அசோசியேசன் சங்க கூட்டம் நடைபெற்றது