டி20 உலகக் கோப்பைத் தொடரில் இருந்து ஜிம்பாப்வே நட்சத்திர வீரர் பிரண்டன் டெய்லர் விலகுவதாகத் தெரிவித்துள்ளதைப் பற்றி…

டி20 உலகக் கோப்பைத் தொடரில் இருந்து ஜிம்பாப்வே நட்சத்திர வீரர் பிரண்டன் டெய்லர் விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 7 ஆம் தேதி தொடங்கிய டி20 உலகக்கோப்பைத் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரின் கொழும்புவின் பிரேமதசா கிரிக்கெட் திடலில் இன்று (பிப்.13) நடைபெறும் லீக் சுற்றின் 19-வது போட்டியில் ஆஸ்திரேலியா – ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டியில் ஜிம்பாப்வே அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான பிரண்டன் டெய்லர், ரிச்சர்ட் நகர்வாவுக்குப் பதிலாக டோனி முன்யோங்கா, கிரேம் க்ரீமர் இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
லீக் சுற்றுப் போட்டிகளில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஓமனுக்கு எதிரான போட்டியின் போது பிரண்டன் டெய்லர் காயமடைந்தார். இந்தப் போட்டியில் அவர் 31 ரன்கள் குவித்திருந்தார். அவரின் காயம் என்ன? என்பது குறித்த சரியான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
40 வயதான பிரண்டன் டெய்லர் டி20 உலகக் கோப்பையில் முதல் சீசனிலும் (2007) கடைசி சீசனிலும் விளையாடியவர் என்ற சிறப்பையும் பெற்றிருந்தார். அவர் காயத்தால் விலகியிருப்பது ஜிம்பாப்வே அணிக்குப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
2004 ஆம் ஆண்டில் ஜிம்பாப்வே அணிக்கு அறிமுகமான பிரண்டன் டெய்லர், இதுவரை 36 டெஸ்ட், 207 ஒருநாள், 59 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த 5 டி20 போட்டிகளில் மூன்றாவது முறையாக ரிட்டயர் ஹர்ட் முறையில் டெய்லர் விக்கெட்டைப் பறிகொடுத்துள்ளார்.

More Stories
ஐபிஎல் 2026: ராஜஸ்தான் ராயல்ஸின் முழு நேர கேப்டனாகிறார் ரியான் பராக்
T20 WC 2026: கொழும்பு பிட்சில் இந்திய அணிக்கு பாகிஸ்தான் ஸ்பின் பவுலிங் அச்சுற்றுத்தலா?
T20 WC 2026: கோட்டை விட்ட ஆப்கன்; 2-வது சூப்பர் ஓவரில் தென் ஆப்பிரிக்கா போராடி வெற்றி