February 15, 2026

3 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 இடம் கூடுதலாக கோரி சுகாதாரத் துறை மனு

3 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 இடம் கூடுதலாக கோரி சுகாதாரத் துறை மனு

சென்னை: தமிழகத்தில் 3 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 இடங்களை அதிகரிக்குமாறு தேசிய மருத்துவ ஆணையத்திடம் தமிழக சுகாதாரத் துறை விண்ணப்பித்துள்ளது.

நாமக்கல், திருவள்ளூர், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிக்குமாறு தேசிய மருத்துவ ஆணையத்திடம் தமிழ்நாடு மாநில மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்குநரகம் விண்ணப்பித்துள்ளது.

அதற்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் அளித்தால், நடப்பு ஆண்டு மருத்துவக் கலந்தாய்வில் அந்த கூடுதல் இடங்கள் சேர்க்கப்படும். தேவையான வசதிகள் உள்ளனதமிழகத்தில் கடந்த ஆண்டு 5,200 அரசு எம்பிபிஎஸ் இடங்களுக்கும், மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் 50 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.

ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியிலும் கூடுதலாக இடங்களை பெறுவதற்குத் தேவையான வசதிகள் உள்ளன. ஆனால், தற்போது மதுரை எய்ம்ஸ் மாணவர்கள் அங்கு படித்து வருவதால், அந்த கல்லூரிக்கு கூடுதல் இடங்கள் கேட்டு விண்ணப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love