
புதுடெல்லி: மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”மகளிர் மற்றும் சிறுமிகளுக்காகத் தனித்துவமாகச் செயல் படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் பொதுவான திட்டங்களில் பெண்களுக்கு சென்றடையும் நிதியின் பங்கு ஆகியவற்றை ஒருங்கிணைத்து பாலின பட்ஜெட் அறிக்கை தயாரிக்கப்படுகிறது.
இந்த அறிக்கையின்படி, 2026- 27 நிதியாண்டுக்கான ஒதுக்கீடு ரூ.5.01 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த நிதியாண்டில் ரூ.4.49 லட்சம் கோடியாக இருந்தது. ஆக 11.55% நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் பாலின பட்ஜெட்டின் பங்கு கடந்த முறை 8.86% ஆக இருந்தது. இது தற்போது (2026- 27) 9.37% ஆக உயர்ந்துள்ளது” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More Stories
‘நாங்கள் ஏழையாக வாழ வேண்டுமா?’ – பிஹார் எம்எல்ஏ மைதிலிக்கு ஆதரவாக கங்கனா கேள்வி
திருப்பதி பிரம்மோற்சவ விழா சர்வ தரிசனத்துக்கு 8 கி.மீ. தூரம் நடக்க வேண்டுமா? – பக்தர்கள் அதிருப்தி
‘பிரதமர், அவரது தாய் குறித்த பேச்சு தரக்குறைவானது’ – ராகுல் காந்திக்கு பாஜக மூத்த தலைவர்கள் கண்டனம்