*விஐடி துணை தலைவர் சங்கர் விசுவநாதனுக்கு “கவுரவ டாக்டர்” பட்டம்* தாய்லாந்து பல்கலை. வழங்கியது *வேலூர்:* விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன் அவர்களுக்கு தாய்லாந்தின் பாங்காங் நகரில் உள்ள ராஜமங்கலா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் க்ருங்தெப் (RMUTK) “கவுரவ டாக்டர்” பட்டம் வழங்கியுள்ளது. தாய்லாந்து நாட்டின் பிரிவி கவுன்சில் ஆலோசனை குழு உறுப்பினரான பலகோர்ன் சுவன்ரத் மற்றும் ராஜமங்கலா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தலைவர் பிச்சை ஜன்மனி ஆகியோர் விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதனுக்கு “கவுரவ டாக்டர்” பட்டத்தை வழங்கி சிறப்பித்தனர். இந்த உயரிய விருது திரு சங்கர் விசுவநாதனின் பொறியியல் கல்வித்துறையில் சிறப்பான பங்களிப்பு மற்றும் தலைமைத்துவம் மற்றும் உயர்கல்வியில் தொழில்நுட்ப மேலாண்மை முன்னேற்றம் ஆகியவற்றை பாராட்டி “கவுரவ டாக்டர்” பட்டம் வழங்கப்பட்டுள்ளது. நிகழ்வில் விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன், ரமணி பாலசுந்தரம், உதவி துணை தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன், டாக்டர் ஏ.ஷ்ரவன் கிருஷ்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

More Stories
டெல்லி ஏஐ மாநாடு: மைக்ரோசாப்ட் ஸ்மித் முதல் ‘மெட்டா’ அலெக்சாண்டர் வரை கூறியது என்ன?
“உலகுக்கு இந்தியா தலைமை வகிக்கும்” – டெல்லி மாநாட்டில் ஓபன் ஏஐ சாம் ஆல்ட்மேன் புகழாரம்
ஏழைகளுக்கு மலிவு விலையில் டெல்லியில் 25 அடல் கேன்டீன்கள்