September 21, 2026

அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா 

தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் பாண்டியன் தலைமை வகித்தார். இவ்விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய நடனங்கள் நடைபெற்றது.மேலும் இந்த கலைநிகழ்ச்சி, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. இவ்விழாவில் பள்ளி உதவி தலைமையாசிரியர் செல்வராஜ், ஆசிரியர்கள் கென்னடி, சக்தி, சுரேஷ், ஜமின்தார், அர்ச்சுனன் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் கனிமொழி, உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Spread the love