இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பயிற்சி மையத்தில், பாவை பவுண்டேஷன் சார்பில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் விஸ்பவதி தலைமையில் இராமநாதபுரம் மாவட்ட பாவை பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர் கணகராஜ் முன்னிலையில் அங்கன்வாடி மையங்களுக்கு கற்றல் திறன் மேம்பாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.குழந்தைகளின் ஆரம்ப கல்வி மற்றும் முழுமையான வளர்ச்சியை கருத்தில் கொண்டு, கற்றல் உபகரணங்களுடன் குழந்தைகளின் உயரத்தை கண்காணிக்கும் அளவீட்டு கருவிகள் அங்கன்வாடி மையங்களில் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. பயிலும் குழந்தைகளின் அறிவாற்றல் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்த உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் திட்ட அலுவலர்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்