பக்தர்களுக்கு அன்னதானம் என் ஹரிஹரமுத்து வழங்கினார்
பழனி பிப்ரவரி 21
பழனி மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, கண்பத் கிரேண்ட் அதிபர் என்.ஹரிஹரமுத்து சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பழனி மாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பழனி வருத்தமில்லா வாலிபர் சங்கம் சார்பில் ஒவ்வொரு நாளும் மாரியம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் ஆராதனை செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று உபயதாரர் பழனி கண்பத் ஹோட்டல் அதிபர் என்.ஹரிஹரமுத்து சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை பழனி டவுன் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தொடங்கி வைத்தார். இதில் சரவண பொய்கை கந்த விலாஸ் அதிபரும், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில இணை செயலாளருமான என்.பாஸ்கரன், வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட தலைவர் ஜே.பி.சரவணன், வருத்தமில்லா வாலிபர் சங்க நிர்வாக தலைவர் எம்.முருகானந்தம், சி.வி.செல்வம், பழனிச்சாமி, திமுக கவுன்சிலர் கே.சுரேஷ், வழக்கறிஞர் மணிகண்ணன், முன்னாள் கவுன்சிலர்கள் வி.ஏ.பி.குமார், பேச்சியம்மாள் ரைஸ் மில் அதிபர் சுப்ரமணி, ஐயப்பா மணி, மகாலிங்கம், ஆனந்தகுமார், வணிகர் சங்க பேரமைப்பு கண்ணுச்சாமி, ஜெகதீஷ், ராதாகிருஷ்ணன், ஈஸ்வரமூர்த்தி, கண்ணம்மாள், பழனிச்சாமி, சோலை தேவர், உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்