நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், ப.வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது.
இதற்காக 6 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 1,780 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நாளான வரும், 23ம் தேதி பணியாற்ற ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் தலா, ஒரு முதன்மை அலுவலர், 3 நிலைகளிலான வாக்குச்சாவடி அலுவலர்கள் என மொத்தம், 4 பேர் நியமிக்கப்படுவார்கள். இந்த பணியில் ஈடுபடும் மொத்தம் 8,544 அலுவலர்களுக்கு, கடந்த 23ம் தேதி, கம்ப்யூட்டர் மூலம் முதற்கட்டமாக சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள அலுவலர்கள் கம்ப்யூட்டர் சுழற்சி முறையில், இரண்டாம் கட்டமாக தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. மேலும், எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரம், தபால் வாக்கு, தேர்தல் நுண்பார்வையாளர்கள் பயிற்சி, தபால் வாக்கு பதிவிற்கான பயிற்சி, வாக்கு சீட்டு ஆகிய பொருள் குறித்து தொடர்புடைய பொறுப்பு அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
முன்னதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான துர்கா மூர்த்தி தலைமையில், தேர்தல் பொதுப் பார்வையாளர்களான மனோஜ் புஷப், சஞ்சய் லாலாசாஹிப் யாதவ் ஆகியோர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை, ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையம் ஆகியவற்றின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.
டி.ஆர்.ஓ.,க்கள் சரவணன், கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் சந்தியா, சுஜாதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

More Stories
கள் இறக்கிய தொழிலாளி மீது துப்பாக்கிச் சூடு: 3 காவலர்கள் மீது வழக்குப்பதிவு!
புதுக்கோட்டை
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராமச்சந்திரன், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடை பயிற்சி மேற்கொண்டவர்களிடம் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.