April 17, 2026

திமுக எம்.பிக்களுடன் முதல்வர் அவசர கூட்டம்..தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டிற்கு உண்டாகும் பாதிப்பு -விவரம்!

தொகுதி மறுவரையறை சட்டத்திறத்த மசோதா நாளை தாக்கல் ஆக உள்ள நிலையில் இன்று காலை 11 மணிக்கு முதலமைச்சரு மு க ஸ்டாலின் முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை கடந்த 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்பட்டது. அதன் பின்னர் மக்கள் தொகையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் தற்போதைய தொகுதிகளை மறுசீரமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தொகுதி மறு வரையறை மசோதாவை விரைவில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

தொகுதி மறுவரையறை என்றால் என்ன?

தொகுதி மறுவரையறை என்பது ஒரு நாட்டின் அல்லது மாநிலத்தின் மக்கள் தொகை மாற்றங்களுக்கு ஏற்ப, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகளை மாற்றியமைக்கும் நடைமுறையாகும்.தற்போது மக்களவையில் 543 தொகுதிகளுக்கே தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்திய அரசியலமைப்பு புதிய சட்டதிருத்ததின்படி,அதிகபட்சம் 550 உறுப்பினர்கள் நிர்ணயிக்கப்படலாம். மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 850 ஆக உயர்த்தப்படவுள்ளது. இதில் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 35 தொகுதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

  

தொகுதி மறுவரையறை ஏன் செய்யப்படுகிறது?

ஜனநாயகத்தில் ஒவ்வொரு ஓட்டும் முக்கியமானது. ஒரு தொகுதியில் 10 லட்சம் மக்கள், மற்றொரு தொகுதியில் 30 லட்சம் மக்கள் இருந்தால் அது சமமான பிரதிநிதித்துவமாக இருக்காது. எனவே, அனைத்துத் தொகுதிகளிலும் ஏறக்குறைய சமமான எண்ணிக்கையிலான வாக்காளர்கள் இருப்பதை உறுதி செய்ய இந்த மறுசீரமைப்பு செய்யப்படுகிறது.1976-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தத்தின்படி, மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை ஊக்குவிக்க 2026 வரை தொகுதி மறுவரையறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது 2026ல் தொகுதிமறுவறையரை சட்டத்திருந்ததில் மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளது.

திமுக 10 முறை வென்ற தொகுதி…இந்த முறை யாருக்கு?

இது எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது?

  • இதற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி மத்திய அரசால் தொகுதி மறுவரையறை ஆணையம் (Delimitation Commission) அமைக்கப்படும்.
  • இந்த ஆணையம் மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census) தரவுகளின் அடிப்படையில் செயல்படும்.
  • ஆணையம் எடுக்கும் முடிவுகளுக்கு எதிராக எந்த நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்ய முடியாது.
  • தொகுதி மறுவரையறை என்பது மக்கள் தொகைக்கு ஏற்ப தொகுதிகளைப் பிரிப்பது. இது ஜனநாயக முறைப்படி அவசியமானது என்றாலும், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்பதே தற்போதைய முக்கிய விவாதமாக உள்ளது.

புதிய மறுசீரமைப்பில் பெண்களுக்கு சுமார் 280 இடங்கள் ஒதுக்கீடு

இதற்கிடையே மகளிருக்கு இடஒதுக்கீட்டை விரைவாக அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக, 2029ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலிலேயே இதை நடைமுறைப்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசு உள்ளது. இதனை முன்னிட்டு தொகுதி மறுவரையறை மசோதாவுடன் சேர்த்து மகளிர் இடஒதுக்கீடு சட்ட திருத்த மசோதாவையும் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய மறுசீரமைப்பில் பெண்களுக்கு சுமார் 280 இடங்கள் ஒதுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக ஏப்ரல் 16 முதல் 18 வரை நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளது.மேலும் இந்த தொகுதி மறுவரையறை தமிழ்நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்றால் கடுமையான எதிர்ப்பு உருவாகும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மேலும் இந்த விவகாரம் குறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், தேர்தல் சூழ்நிலையில் எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வரும் நேரத்தில் ,இத்தகைய அவசர கூட்டத்தை நடத்துவது சரியானது அல்ல என்று விமர்சித்துள்ளார். மத்திய அரசு அவசரமாக இந்த திட்டத்தை முன்னெடுக்கிறது என்பது ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டிற்கு என்ன பாதிப்பு உண்டாகும்?

தமிழ்நாடு,ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்கள் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால், வட மாநிலங்களில் மக்கள் தொகை பல மடங்கு அதிகரித்துள்ளது.மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் பிரிக்கப்பட்டால், வட மாநிலங்களுக்கு அதிக எம்பிக்களும், தென் மாநிலங்களுக்குக் குறைவான எம்பிக்களும் கிடைக்கும் சூழல் உருவாகும்.

இது தேசிய அரசியலில் தென் மாநிலங்களின் செல்வாக்கைக் குறைத்துவிடும் என்ற கவலை எழுந்துள்ளதால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புதிய சட்டதிருத்ததின்படி,தமிழ்நாட்டில் 39 எம்பி உள்ளனர். இவற்றில் சுமார் 59 இடங்களாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.அதாவது, தமிழ்நாட்டிற்கு 39-ஐ விட கூடுதல் எம்பி இடங்கள் கிடைக்கும். ஆனால், வட மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தப் பிரதிநிதித்துவ விகிதம் குறையக்கூடும்.

இந்த சூழலில் முதல்வர் ஸ்டாலின் திமுக எம்.பிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுப்பட்டு உள்ளார்.

Spread the love