என் அளவிற்கு அரசியல் பேசியது உண்டா? என தவெக தலைவர் விஜய்யை பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரக் காலமே இல்லாத நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.அதன்படி, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிபிஎம் வேட்பாளர் என்.பாண்டி பழனிசட்டமன்ற தொகுதியில் போட்டியிட உள்ளார். இந்த நிலையில் இவருக்கு ஆதரவாக வாக்கு கேட்டு பிரகாஷ் ராஜ் பிரச்சாரம் செய்தார்.
தமிழக தேர்தல் 2026 பிரச்சாரம்
அப்போது பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட மற்ற கட்சிகள்.. அடிமை மாடல் தமிழ்நாட்டில் தேர்தல் நேரத்தில் துரோகம் நடந்து கொண்டிருக்கிறது. இதைப் பார்த்து அனைவரும் வாயை மூடிக்கொண்டு நின்று கொண்டிருக்கிறார்கள் இந்த மாடல் நமக்கு தேவையா என்று கேள்வி எழுப்பினார். இங்கு திருப்பரங்குன்றத்தில் நடப்பது பற்றி நான் இங்கு பேசவில்லை. திருப்பரங்குன்றம் விவகாரம் மூலமாக மதுரையை இன்னொரு மணிப்பூராக மாற்றப் பார்க்கிறார்கள்.அங்கிருந்து பழனிக்கு வரபோகிறார்கள்.இதுதான் நடக்க போகிறார்கள்.பழனியை முருகனை முப்பாட்டனார் என்று கூறுகிறார்கள்.இந் த கூட்டத்திற்கு இந் துகள் மீது அன்புகிடையாது. அதிகாரத்தை கைப்பற்ற வேண்டுமென்பதுதான் அவர்களின் நோக்கம் என்று கூறினார்.
வில்லிவாக்கத்தில் சம்பவம் செய்யும் தவெக! யாரும் யோசிக்காத வியூகம்!
சினிமா வேறு… அரசியல் வேறு..
தொடர்ந்து பேசிய அவர்,சினிமா மாடல் ஒன்று உள்ளது. சினிமாவில் ஒரே படத்தில் டாக்டராகவும், இன்ஜினியராகவும், முதல்வராகவும் ஆகலாம். ஆனால் அரசியலில் அப்படி முதல்வராகி விட முடியுமா? யார் அரசியல் பேச வேண்டும்.என்னுடைய அளவிற்கு அரசியல் பேசி இருக்கியா பா நீ? தமிழ்நாட்டு மக்களுக்கு மொழிக்கும், தன்மானத்துக்கும், பிரச்சனை ஏற்பட்ட போது போராட்ட களத்திற்கு வந்துள்ளாரா? சினிமாவில் திறமையை பார்த்து மக்கள் வைத்துள்ள அன்பை அரசியலுக்கு பயன்படுத்துகிறார். நடிகரை பிடித்தால் விசில் அடிக்கலாம் ஆனால் நாட்டை கொடுக்க முடியுமா? நாட்டை கொடுக்க கூடாது. சினிமா வேறு.. அரசியல் வேறு.. சீமான் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் களத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்.
திராவிட மாடல் vs அடிமை மாடல்
தமிழ்நாட்டிற்கு திராவிட மாடல் வேண்டுமா? அல்லது அடிமை மாடல் வேண்டுமா? சினிமா மாடல் வேண்டுமா என்று தவெக தலைவர் விஜய்யை விமர்சித்து கேள்விஎழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர்,அரசியல் யார் செய்ய வேண்டும் என்று மக்களிடம் கேள்வி கேட்கிறேன். அரசியல் நாம் பண்ண வேண்டும். என்னை பொறுத்தவரைக்கும் வெற்றி பெற்றவர்கள் வேலை செய்ய வேண்டும். ஆனால் இந்தியாவில்,மட்டும் தான் வெற்றி பெற்றவர்கள் அரசியல் செய்கிறார்கள். நாம் வேலை செய்துக் கொண்டு இருக்கிறோம் என்று கூறினார். இந்த தேர்தல் முக்கியமான தேர்தல் நமக்கு யார் வேண்டும் என்று யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று கூறினார்.
பழனிசட்டமன்ற தொகுதி
2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு எம்ஜிஆர் பாணியில் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளார். விஜய் வருகையால் அதிமுக, திமுக கட்சிகளின் வாக்குகள் சிதறும் என்று கூறப்படுகிறது.தொடர்ந்து,அரசியல் களத்தில் உள்ள பிரதான கட்சிகள் தவெக விஜய்யை கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.பழனி தொகுதிக்கான 2021 தேர்தலில், அதிமுக வேட்பாளர் ரவி மனோகரன் கே இரண்டாம் இடம் பிடித்தார். அவர் திமுக வேட்பாளர் செந்தில் குமார் ஐ.பி.யிடம் தோல்வியடைந்தார். 52.9% வாக்கு சதவீதத்தைப் பதிவு செய்தார்.ரவி மனோகரன் மொத்தம் 78,510 வாக்குகளைப் பெற்று, 30,056 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.இந்த தொகுதி திமுக வசமிடம் இருந்து கூட்டணி கட்சிக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

More Stories
கரூரில் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை
தமிழகத்தில் வீதி எங்கும் விசில் கோலங்கள்! விஜய்யின் ஒற்றை வேண்டுகோளுக்கு கிடைத்த மாஸ் ரெஸ்பான்ஸ்
தைலாபுரத்தில் ஐயாவின் ஜனநாயகக் கடமை! வீட்டிலிருந்தே தபால் வாக்கைப் பதிவு செய்த ராமதாஸ்!