April 22, 2026

234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்: பிரச்சாரத்தை நிறைவு செய்த உதயநிதி திட்டவட்டம்

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இறுதிநாளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

சென்னை: தமிழகத்​தின் உரிமை​களைப் பாது​காக்​கும் இந்த ஜனநாயகப் போரில், 234 தொகு​தி​களி​லும் மதச்​சார்​பற்ற முற்​போக்​குக் கூட்​டணி மகத்​தான வெற்றி பெற்​று, மீண்​டும் ‘தி​ரா​விட மாடல் 2.0’ ஆட்சி அமை​யும் என திமுக இளைஞரணிச் செய​லா​ளர் உதயநிதி ஸ்டா​லின் உறு​திபடத் தெரி​வித்​தார்.

தமிழகத்​தில் நாளை சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெறுகிறது. இதற்​கான தேர்​தல் பிரச்​சா​ரம் நேற்று மாலை​யுடன் நிறைவடைந்​தது. இத்​தேர்​தலில் 2-வது முறை​யாக சேப்​பாக்​கம் திரு​வல்​லிக்​கேணி தொகு​தி​யில் உதயநிதி ஸ்டா​லின் போட்​டி​யிடு​கிறார்.

அவர் நேற்று தொகு​தி​யில் தீவிரப் பரப்​புரை​யில் ஈடு​பட்​டார். வீதி வீதி​யாகச் சென்று மக்​களிடம் வாக்கு சேகரித்​தார். அப்​போது அவருக்கு மக்​கள் உற்​சாக வரவேற்பு அளித்​தனர்.

இதையடுத்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “கடந்த மார்ச் 30-ல் காஞ்​சிபுரத்​தில் தொடங்​கி, ஏப்​ரல் 21 வரை 23 நாட்​களில் 135 தொகு​தி​களில் தீவிரப்பரப்​புரை மேற்​கொண்​டோம். சென்ற இடமெல்​லாம் திமுகவின் மக்​கள் நலத்​திட்​டங்​களுக்​குப் பெரும் வரவேற்பு இருப்​பதை நேரில் கண்​டேன்.

‘விடியல் பயணம்’, ‘மகளிர் உரிமைத் தொகை’ போன்ற திட்​டங்​கள் மக்​களின் வாழ்​வில் ஒளி​யேற்​றி​யுள்​ளன. தமிழகத்தை ஆக்​கிரமிக்​கத் துடிக்​கும் பாசிச பாஜக​வுக்​கும், அதற்​குப் பாதை அமைத்​துக் கொடுக்​கும் பழனி​சாமிக்​கும் பாடம் புகட்ட மக்​கள் தயா​ராகி​விட்​டார்​கள்.

மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்​வு, இல்​லத்​தரசிகளுக்கு ரூ.8,000 மதிப்​பிலான கூப்​பன்​கள், கல்​லூரி மாணவர்​களுக்கு லேப்​டாப் போன்ற திமுக​வின் வாக்​குறு​தி​கள் மக்​களிடம் பெரும் நம்​பிக்​கையை விதைத்​துள்​ளன.

சொன்​னதைச் செய்​யும் முதல்​வர் மீதான மதிப்பு பன்​மடங்கு உயர்ந்​துள்​ளது. தமிழகத்​தின் அரசி​யல் குரலை நெரிக்க முயன்ற தொகுதி மறு​வரையறை மசோ​தாவை எதிர்த்​துப் போராடி, அதை நாடாளு​மன்​றத்​தில் வீழ்த்​தி​யது நமது தலை​வரின் சரித்​திர வெற்​றி. இந்த வெற்றி சட்​டமன்​றத் தேர்​தலிலும் எதிரொலிக்​கும்.

பாசிச சக்​தி​களை​யும், அதி​முக அடிமைக் கூட்​டத்​தை​யும் வாக்கு ஆயுதத்​தால் வீழ்த்​து​வோம். மே 4-ம் தேதி வாக்கு எண்​ணிக்கை முடி​யும் வரை திமுக​வினர் விழிப்​புடன் பணி​யாற்​றி, ‘முத்​து​வேல் கருணாநிதி ஸ்டா​லின்’ எனும் குரல் மீண்​டும்​ ஒலிக்​கச்​ செய்​வோம்​” எனத் தெரிவித்துள்ளார்.

Spread the love