சென்னை: சென்னை – நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் மொத்தம் 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த சூழலில் தவெக மூலம் நேரடி அரசியலில் விஜய் ஈடுபட்டு வருகிறார். அவரது கட்சி சார்பில் தமிழகத்தின் 233 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் சுயேச்சை வேட்பாளருக்கு தவெக ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று காலை தனது ஜனநாயக கடமையை ஆற்றும் வகையில் தன் வீட்டில் இருந்து புறப்பட்ட விஜய், சென்னை – நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். இந்த தேர்தலில் சென்னை – பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார்.
வழக்கமாகவே சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தல்களில் நடிகர் விஜய் வாக்களிப்பார். இந்தமுறை தவெக தலைவராக வாக்களித்திருக்கிறார். தவெக சார்பில் சென்னை தி.நகரில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் தொகுதிகளில் களம் காண்பது குறிப்பிடத்தக்கது.

More Stories
2030-க்குள் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘சுதேசி’ புல்லட் ரயில் தயாரிக்க மத்திய அரசு இலக்கு
கடந்த நிதி ஆண்டில் பெல் நிறுவனம் ரூ.32,350 கோடி வருவாய் ஈட்டி சாதனை: செயல் இயக்குநர் தகவல்
சொந்த பாஸ்போர்ட்டில் வெளிநாட்டுப் பயணம்; அமைச்சர்கள் கீர்த்தனா, ராஜ்மோகனுக்கு மத்திய அரசு நோட்டீஸ்