மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்
கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான குழுந்தைகள், சிறுவர்கள் சிவபெருமான்,
மீனாட்சியம்மன், கருப்பசாமி வேடமிட்டபடி திருத்தேரின் முன்பாக ஊர்வலமாக
சென்றனர்.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று (ஏப்ரல் 28) விமரிசையாக முடிந்த
நிலையில், கோவிலைச் சுற்றி உள்ள நான்கு மாசி வீதிகளிலும் தேரோட்டம்
நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் லட்சக்கணக்கான மகக்ள்
கலந்துகொண்டுள்ளதால், மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பக்கதர்கள்
விண்ணதிர முழங்க விதவிதமான கயிலாய வாத்தியங்கள் – வித விதமான சங்குகளை
முழங்க தேர் ஆடி அசைந்து பவனி வருகிறது. இதை பல ஆயிரக்கணக்கான பக்தர்கள்
சாமி தரிசனம் செய்தனர்.
பக்கதர்கள் விண்ணதிர முழங்க விதவிதமான கயிலாய வாத்தியங்கள் – வித விதமான
சங்குகளை முழங்க தேர் ஆடி அசைந்து பவனி வருகிறது. இதை பல
ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
உலகப்பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழாவின்
சிகர நிகழ்வான மீனாட்சி- சுந்தரேசுவரர் திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக காலை
தொடங்கியது. கீழமாசி வீதி தேர்முட்டி பகுதியில் இருந்து சுந்தரேசுவரர்
பிரியாவுடனையுடன் எழுந்தருளிய பெரிய தேரும், அதன் பின் மீனாட்சியம்மன்
பச்சைபட்டுடுத்தி எழுந்தருளிய தேரும் ஒன்றன் பின் ஒன்றாக வடம்பிடித்து இழுத்து
புறப்பாடாகியது.
சுவாமி – அம்மன் எழுந்தருளிய தேர் புறப்பட்டபோது தேரின் முன்பாக கயிலாய
வாத்தியங்களான கொம்புத்தாரை, கொக்கறை, சேமக்கலம், சங்கு,
நகரா,உடுக்கை,பிரம்மதாளம், தப்பு போன்ற இசைக்கருவிகளை இசைத்தபடி சிவ
பக்தர்கள் சென்றனர். மேலும் ருத்ராட்சையால் ஆன சிவலிங்கங்களை தோள்களில்
சுமந்தபடியும், கயிலாய வாத்தியமான உடுக்கையை அடித்தபடி ஏராளமான பெண் சிவ
பக்தர்கள் தொடர்ந்து நான்கு மாசி வீதிகளிலும் சோர்வின்றி தொடர்ந்து இசைத்தபடி
சென்றனர்.
தேர் திருவிழாவையொட்டி, ஏராளமான குழுந்தைகள், சிறுவர்கள் சிவபெருமான்,
மீனாட்சியம்மன், கருப்பசாமி வேடமிட்டபடி திருத்தேரின் முன்பாக ஊர்வலமாக
சென்றனர். திருத்தேரின் முன்பாக சாம்பிராணி புகை இட்டபடி ஏராளமான சிவ
பக்தர்கள் சென்றனர். தேரினை வடம்பிடித்து இழுக்கும் இளைஞர்களை
உற்சாகமூட்டும் வகையில் பெண்கள், சிறுவர்கள் ருத்ராட்ச மாலைகளை அணிந்தடி
சிவ நடனத்துடன் உற்சாகமாக கயிலாய வாத்தியங்களை இசைத்தபடி தேரின்
முன்பாக சென்றனர்..
தேரோட்டத்தை காண மதுரை மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்தும் அண்டை
மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
வருகை தந்துள்ள நிலையில் மதுரை மாநகர காவல்துறை சார்பில் 2 ஆயிரத்திற்கு
மேற்பட்ட கவால்துறையினர் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேரோட்டம்
நடைபெறுவதை முன்னிட்டு மாசி வீதிகள் முழுவதிலும் போக்குவரத்திற்கு தடை
விதிக்கப்பட்டுள்ளது
மாசி வீதிகளில் உயரமாக செல்லும் மின்வயர்கள் தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட
அவசர ஊர்திகள் பாதுகாப்பிற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை நான்கு மாசி வீதிகளிலும்
தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் மதுரை மாநகரமே விழாக்கோலம்
பூண்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை.! தமிழ்நாடு அரசு

More Stories
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் உலகப் புகழ்பெற்ற மஹான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீத் ஒலியுல்லாஹ் தர்ஹாவின் 852வது ஆண்டு சந்தனக்கூடு மத நல்லிணக்க திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது.
பழனி முருகன் மலை கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய முன்னாள் அதிமுக அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வந்திருந்தனர்
பழனியில் ரெணகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். அருகினில் கோயில் நிர்வாகி காணியாளர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் பக்தர்கள் உள்ளனர்