பழனி மே 6
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது கோம்பைபட்டி கிராமம். மலையடிவாரத்தில் உள்ள இந்த ஊரில் புகழ்பெற்ற பெரிய துரையான் கருப்பண்ணசாமி கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன் படி நேற்று அதிகாலை 3 மணி முதல் கிடா வெட்டும் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் சுமார் 250 ஆடுகள் வெட்டப்பட்டது. பின்பு கமகம வாசனையுடன் சமையல் செய்யப்பட்டது. பின்பு பக்தர்களுக்கு கோவில் வளாகத்தில் வாழை இலை போட்டு சுடச்சுட அரிசி சாதம் ஆட்டு இறைச்சி கோழி வறுவல் மற்றும் கமகமக்கும் குழம்பு ஊற்றப்பட்டு அன்னதான விருந்து வழங்கப்பட்டது. சுமார் 10,000 பேர் விருந்தில் பங்கேற்றனர்.

More Stories
பெரம்பலூர், மே.5-
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. தவெக நிர்வாகி கைது.. அதிர்ச்சியில் பொதுமக்கள்!
இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி