May 13, 2026

பிரதமர் மோடி மே 15-ல் யுஏஇ உட்பட 5 நாடுகள் பயணம்

புதுடெல்லி: பிரதமர் நரேந்​திர மோடி மே 15 முதல் 20 வரை ஐக்​கிய அரபு அமீரகம் உட்பட 5 நாடு​களுக்​குப் பயணம் மேற்​கொள்​வார் என்று மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது. மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் நீடிக்​கிறது. இந்த சூழ்​நிலை​யில், மத்​திய வெளியுறவு அமைச்​சகம் நேற்று முன்​தினம் வெளி​யிட்ட அறிக்கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: பிரதமர் நரேந்​திர மோடி மே 15-ம் தேதி ஐக்​கிய அரபு அமீரகம் செல்கிறார்.

அங்கு அவர் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானைச் சந்தித்துப் பேச உள்ளார். இதைத் தொடர்ந்​து, நெதர்​லாந்து (மே 15-17), ஸ்வீடன் (மே 17-18), நார்வே (மே 18-19), இத்​தாலி (மே 19-20) ஆகிய நாடு​களுக்​குச் செல்​வார். நார்​வே​யில், மே 19-ம் தேதி நடை​பெறும் இந்​தி​யா-நோர்​டிக் உச்சி மாநாட்​டில் அவர் கலந்து கொள்கிறார். இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.

Spread the love